ஒரே ஒரு ஐட்டம் சாங்கால் பட வாய்ப்புகளை இழந்த எலி நடிகை.. கெட்ட ஆட்டம் போட்டதுலாம் வேஸ்ட்

அந்த நான்கெழுத்து நடிகை சினிமாவில் அறிமுகமான முதல் படமே பிரபல இயக்குனரின் படம் என்பதால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டார். அதே போலவே அவரும் தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். அவர் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றன. பல இளம் நடிகர்கள் அந்த நடிகையுடன் ஜோடி சேர விருப்பம் தெரிவித்து வந்தனர்.

பார்ப்பதற்கு மிகவும் அழகாக குடும்ப குத்து விளக்கு போன்று இருப்பதால் ஆரம்ப காலங்களில் குடும்பப்பாங்கான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தார். மேக்கப் இல்லாமலும் அழகாக இருக்கும் அந்த நடிகையைப் பார்த்த ரசிகர்கள் திருமணம் செய்தால் இப்படி ஒரு பெண்ணை தான் திருமணம் செய்ய வேண்டும் என ஏங்கி தவித்து வந்தனர். அந்த அளவிற்கு தனது அழகால் தமிழ் ரசிகர்களை தன் வசம் வைத்திருந்தார் அந்த நான்கெழுத்து நடிகை.

நல்ல இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்து தரமான படங்களில் நடித்து வந்த அந்த நடிகை தமிழ் சினிமாவில் இளம் நடிகர் ஒருவருடன் காதலில் விழுந்தார். இருவரும் அடிக்கடி ஊர் சுற்றுவது, படப்பிடிப்பு தளங்களில் ஒன்றாக அமர்ந்து பேசுவது என ஜாலியாக உலா வந்தனர். இதுதவிர அந்த நடிகைக்கு வீட்டில் ஏற்பட்ட சில சொந்தப் பிரச்சினை காரணமாகவும் சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

பிரச்சனைகள் முடிந்து மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த அந்த நடிகைக்கு சரியான படவாய்ப்புகள் அமையவில்லை. எனவே அதுவரை குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்த அந்த நடிகை பட வாய்ப்புக்காக கிளாமரில் இறங்க முடிவு செய்தார். அதேபோல் பிரபல நடிகர் ஒருவரின் படத்தில் ஐட்டம் பாடல் ஒன்றிற்கு மிகவும் கவர்ச்சியாக நடனம் ஆடியிருந்தார்.

இதன் மூலம் பட வாய்ப்புகள் அமையும் என எதிர்பார்த்த அந்த நடிகைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தொடர்ந்து இதேபோன்று ஐட்டம் பாடலுக்கு மட்டுமே அவரை இயக்குனர்கள் அணுகி வந்தனர். கிளாமர் காட்டினால் கூடுதல் வாய்ப்பு வரும் என நினைத்த நடிகைக்கு மொத்தமும் ஏமாற்றம் தான். இருந்த வாய்ப்புகளும் நழுவி செல்ல வெக்ஸ் ஆகியுள்ள நடிகை கிளாமரை நம்பி கேரியரை காலி செய்து கொண்டேனே என புலம்பி வருகிறாராம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்