டாப் ஹீரோனா மட்டும் கதை கேட்பேன்.. 20 வயதிலேயே பந்தா பண்ணும் நடிகை

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அந்த நடிகை. அதன் பின்னர் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சியிலும் பங்கேற்று மேலும் பிரபலமானார். அந்த நடிகைக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.

குறிப்பாக அவரின் வெகுளித்தனமான பேச்சும், குழந்தைத்தனமான குறும்பும் பலரை ஈர்த்தது. நடிகைக்கு கிடைத்த புகழை பார்த்த தொலைக்காட்சியும் தொடர்ந்து நடிகையை பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்து அவர்களின் டிஆர்பியை அதிகரித்து வந்தார்கள்.

மக்கள் மத்தியில் தொடர்ந்து பிரபலமான அவருக்கு படங்களில் பாடல் பாட மட்டும் அல்லாமல் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தன. தற்போது கைவசம் ஒரு சில புதிய படங்களில் நடித்து வரும் அந்த நடிகை பட வாய்ப்புகள் கிடைத்த பின்னர் ஓவராக சீன் போடுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

அந்த நடிகை மிகவும் அப்பாவியானவர் என்றே பலரும் நினைத்து வந்தனர். இந்நிலையில் கடை திறப்பு விழா மற்றும் விளம்பர நிகழ்ச்சிக்காக நடிகையை தொடர்பு கொண்டு பேசிய சிலரிடம் நடிகை லட்ச கணக்கில் சம்பளம் கேட்டாராம்.

அதுமட்டுமின்றி படங்களில் நடிக்க அழைத்தால், பெரிய ஹீரோக்கள் படம் என்றால் தான் கதை கேட்பேன். அதிலும் ஹிட் இயக்குனர்கள் படம் என்றால் தான் நடிப்பேன் என கண்டிசன் போடுகிறாராம். ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டால், நான் மிகவும் பிரபலம் எனவே அப்படித்தான் இருப்பேன் என ஓவர் பில்டப் கொடுக்கிறாராம்.

என்னதான் பிரபலமாக இருந்தாலும் இப்படியா அலப்பறைய கொடுக்கறது. எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. இன்னைக்கு தூக்கி வச்சு கொண்டாடுற இதே ரசிகர்கள் நாளைக்கே தூக்கி கீழ போடவும் செய்வாங்க. அதுக்கு ரெம்ப நாள் ஆகாது. எங்க எப்போ என்ன நடக்கும்னு யாருக்குமே தெரியாது. அதனால இப்படி சீன் போடாம இருக்குற நல்ல பெயரை காப்பாத்திக்கறது தான் நடிகைக்கு நல்லது என பலர் அட்வைஸ் செய்து வருகிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்