டாப் நடிகராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட 5 நடிகர்கள்.. தனுஷின் சூப்பர் ஹிட் படத்தோடு காணாமல் போன பாடகர்

ஒரு சில நடிகர்கள் முதல் படத்திலேயே பார்வையாளர்களை தங்களது சிறந்த நடிப்பால் கவர்ந்து விடுவார்கள். சினிமா ரசிகர்களுக்கும் அந்த நடிகர்கள் மீது அதிகமான எதிர்பார்ப்பு வந்துவிடும். இப்படி முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கும் நடிகர்களில் ஒரு சிலரே அந்த வெற்றியை தக்க வைத்து கொள்கிறார்கள். சினிமாவில் பெரிய இடத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் பல பேர் முதல் படத்திலேயே காணாமல் போய் விடுகிறார்கள். இதற்கு நிறைய பேர் உதாரணமாக இருக்கிறார்கள்.

ஹரிஷ் கல்யாண்: ஹரிஷ் கல்யாண் சிந்து சமவெளி, பொறியாளன் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் சீசன் ஒன்றிற்கு பிறகே மக்களால் அடையாளம் காணப்பட்டார். பிக்பாஸிற்கு பிறகு இவருக்கு பெண் ரசிகைகள் அதிகம் சேர்ந்தனர். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். அந்த படமும் பெரிய ஹிட் அடித்தது. ஆனால் அதன் பிறகு ஹரிஷ் கல்யாணிடமிருந்து சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஹிட் படங்கள் எதுவும் வரவில்லை.

Also Read: ஆக்ஷனில் சொதப்பிய 5 சாக்லேட் ஹீரோக்கள்.. செட்டாகாது தயவு செய்து விட்டுருங்க

அர்ஜுன் தாஸ்: 2012 ல் இருந்தே சினிமாவில் இருந்தாலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான கைதி படம் தான் அர்ஜுன் தாஸுக்கு ஒரு அடையாளம் கொடுத்தது. இவருடைய நடிப்பும், வீரார்ந்த குரலும் குறுகிய காலத்திலேயே நல்ல சக்ஸஸை கொடுத்தது. ஆனால் அர்ஜுன் தாஸ்க்கு லோகேஷ் படங்களை தவிர வேறு படங்களில் இன்னும் வாய்ப்பு அமையவில்லை.

மஹத் ராகவேந்திரா: மஹத்,  வெங்கட் பிரபு-அஜித் கூட்டணியில் உருவான மங்காத்தா படத்தில் அறிமுகமானார். சாக்லேட் பாயாக காதல் கதைகளில் வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட மஹத்துக்கு பிக்பாஸ் இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட பிறகு வேறு எந்த படவாய்ப்புகளும் அமையவில்லை.

Also Read: 2020ஆம் ஆண்டு முரட்டுத்தனமாக உடலை ஏற்றி இறக்கிய 8 நடிகர்கள்.. இணையத்தை மிரள விட்ட புகைப்படங்கள்

துருவ் விக்ரம்: அறிமுக நாயகர்களை விட நடிகர்களின் பிள்ளைகள் நடிக்க வந்தால் அவர்கள் மீது அதிக அழுத்தம் இருக்கும். சினிமாவில் நீண்ட வருடங்களாக போராடி இன்று ‘சீயான்’ என்னும் சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கும் நடிகர் விக்ரம், தன்னுடைய மகனை சினிமாவில் கொண்டு வர தன்னுடைய எல்லா முயற்சிகளையும் செய்தார். ஆனால் துருவ் விக்ரமுக்கு ஆதித்ய வர்மாக்கு பிறகு படவாய்ப்புகள் எதிர்பார்த்ததை விட குறைவாகவே உள்ளது.

‘தீஜே’ அருணாச்சலம்: ஆசை, முட்டு முட்டு, தேன் குடிக்க இசை ஆல்பங்களினால் பிரபலம் அடைந்தவர் ‘தீஜே’ அருணாச்சலம். இவருக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் தனுஷின் மகனாக நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. இவரும் தன்னுடைய முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் அசுரன் படத்திற்கு பிறகு அருணாச்சலம் வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை.

Also Read: துருவ் விக்ரம் பண்ணும் சேட்டை.. அப்பா பெயரை காப்பாற்ற வேண்டாம், கெடுக்காம இருந்தா போதும்

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -