அமெரிக்காவில் செட்டிலான 5 தமிழ் நடிகர்கள்.. விடாமல் துரத்தி நடிக்க வைக்கும் உலகநாயகன் 

தமிழ் சினிமா நடிகர்கள் பலர் தங்களது மார்க்கெட்டுகளை இழந்த பின்னர் திருமணம் செய்துகொண்டு குடும்பத்தோடு வெளிநாடுகளில் செட்டிலாகி விடுவார்கள். அப்படிப்பட்ட நடிகர்கள், தற்போது சமூக வலைத்தளங்களில் குடும்பத்தோடு எடுக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவர். அப்படி நம் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து திடீரென அமெரிக்காவில் செட்டிலான 5 நடிகர்களை தற்போது பார்க்கலாம்.

நெப்போலியன்: 80, 90 காலகட்டம் வரை நடிகர் நெப்போலியன் பல திரைப்படங்களில் வில்லனாகவும், ஹீரோவாகவும், துணை நடிகராகவும் நடித்து அசத்தியுள்ளார். இவரது நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும் ரஜினிகாந்த் நடித்த எஜமான் திரைப்படத்தில் நெப்போலியன் நடித்த வல்லவராயன் கதாபாத்திரம் இன்றளவு பேசப்படும். இவர் தற்போது அமெரிக்காவில் செட்டிலாகி உள்ள நிலையில் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட தனது மகனை மீட்க போராடும் தந்தையாக நெப்போலியன் வலம் வருகிறார். மேலும், சில ஹாலிவுட் திரைப்படங்களிலும் நெப்போலியன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அபிராமி: தமிழில் நடிகர் அர்ஜுனின் நடிப்பில் வெளியான வானவில் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான அபிராமி, தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். 2004ஆம் ஆண்டு வெளியான விருமாண்டி திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த அபிராமி, பலரும் பிரமித்து பார்க்கும் நடிப்பை வெளிப்படுத்தினார். இதனிடையே 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட அபிராமி அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார். அண்மைகாலமாக இவர் சமூக வலைத்தளங்களில் பல பேட்டிகளில் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: அப்பவே இப்படி காட்டி இருந்தா எங்கேயோ போய் இருப்பேங்க.. 40 வயதில் கவர்ச்சிக்கு மாறிய மீரா ஜாஸ்மின்

மீரா ஜாஸ்மின்: மாதவன் நடிப்பில் வெளியான ரன் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான இவர், அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். விஷாலுடன் நடித்த சண்டக்கோழி திரைப்படத்தில் மீரா ஜாஸ்மினின் நடிப்பு பலருக்கும் இன்றுவரை பிடித்தமானது. அண்மைக்காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் மீரா ஜாஸ்மின், திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திவ்யா உன்னி: மலையாள நடிகையான நடிகை திவ்யா உண்ணி, தமிழில் வேதம் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். இத்திரைப்படத்தை தொடர்ந்து பாளையத்தம்மன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் வலம் வந்த திவ்யா உண்ணி ஒரு பரதநாட்டிய கலைஞர் ஆவார். தற்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகியுள்ள நிலையில் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: 40 வயதிலும் சட்டை பட்டனை கழட்டி போஸ் கொடுத்த மீரா ஜாஸ்மின்.. ரீ-என்ட்ரினா இப்படி இருக்கணும்

பூஜா குமார்: உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான பூஜா குமார், தொடர்ந்து கமலஹாசனின் நடிப்பில் விஸ்வரூபம் 2, உத்தமவில்லன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ள பூஜா குமார் அமெரிக்காவை பூர்வீகமாகக் சேர்ந்தவர். இதனிடையே கமலஹாசனும் பூஜாகுமாரும் ஒன்றாக பல நாட்கள் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்த நிலையில், கமலின் திரைப்படங்களில் மட்டும் துரத்தி துரத்தி கமலஹாசன் விடாமல் அவரை நடிக்க வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: ஆன்ட்டி வயதில் ஹாட்டான புகைப்படம் வெளியிட்ட மீரா ஜாஸ்மின்.. இத அப்பவே செஞ்சிருந்தா இவங்க தான் NO.1 நடிகை

- Advertisement -