அட ச்சீ-ன்னு துப்பும் படி தமன்னா செய்யும் வேலைகள்.. தயாரிப்பாளர் தலையில மிளகாய் அரைக்கும் மில்க் பியூட்டி

Actress Tamanna: தற்போது நடிகைகள் எந்த அளவுக்கு படங்களில் நடிக்கிறார்களோ, அதே அளவுக்கு வெப் சீரியஸிலும் அதே கவனம் செலுத்தி நடித்து வருகிறார்கள். அந்த வகையில் தமன்னா சமீபத்தில் நடித்த வெப் சீரியஸில் ரொம்பவே அசிங்கமாக நடித்து இவர் பெயரை இவரே கெடுத்துக் கொண்டார். அது மட்டும் அல்லாமல் ஓவராக எல்லை மீறி நடித்திருக்கிறார்.

இப்படி நடித்துக் கொண்டு இருக்கையில், இன்னொரு பக்கம் இவருடைய கால்ஷீட் வேண்டுமென்றால் இவருக்கு சம்பளமாக ரெண்டு கோடி இருந்தால் மட்டும் தான் நடிக்க முடியும் என்று அடாவடித்தனமாக சொல்கிறார். அதில் ஒரு லட்சம் குறைந்தால் கூட தயவு தாட்சண்யம் பார்க்காமல் நோ கால் சீட்டு என்று மூஞ்சில் அடிக்கும்படி தயாரிப்பாளர்களை வெளியே அனுப்பி விடுகிறார்.

Also read: இப்போ சமந்தா, தமன்னா ஆட்டத்தை அப்போதே ஆடிய ராஜமாதா.. ரசிகர்களை இன்றுவரை கிறங்கடிக்கும் பாடல்

இது போதாது என்று இவர் கூட படப்பிடிப்புக்கு ஏழு பேர் வருவார்களாம். அந்த ஏழு பேருக்கும் தினமும் ஒன்றரை லட்ச ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் கண்டிஷன் போட்டு வருகிறார். அதுபோக வெளிநாடு சூட்டிங் இருந்தால் பிளைட்டில் போகும் போது இவருக்காக தனி இரண்டு சீட்டுகள் புக் பண்ண வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அதாவது ஒரு சீட்டில் தமன்னா உட்காருவார், மற்றொரு சீட்டு காலியாக இருக்க வேண்டும். ஏனென்றால் பக்கத்தில் யாராவது உட்கார்ந்து எந்த தொந்தரவும் கொடுத்து விடக்கூடாது என்பதற்காக. அது மட்டும் இன்றி முதல் இருக்கையில் தான் சீட் போட வேண்டுமாம்.

Also read: ஹீரோயின் சொன்னா யாரும் நம்பல ஆனா வெற்றி பெற்ற 5 நடிகைகள்.. தமன்னா, சமந்தாவையே ஓரம் கட்டிய மலைவாசி பெண் நடிகை

அத்துடன் இவர் யார் என்று மற்றவர்களுக்கு தெரியாதபடி மாஸ்க் போட்டுக்கொண்டு தான் வருவாராம். அப்பொழுது உடனே கதவு திறந்து உள்ளே போனதும் அந்த விமானம் யாருக்காகவும் வெயிட் பண்ண கூடாது. ஜெட் வேகத்தில் பறந்து விட வேண்டுமாம். இப்படி பல கண்டிஷன்களை தயாரிப்பாளர்களிடம் போட்டு அவர்களைப் படாதபாடு படுத்தி வருகிறார்.

இதையெல்லாம் கேட்கும் போது ச்சீ-ன்னு துப்பும் படி தான் இருக்கு. ஆனாலும் தயாரிப்பாளர்களுக்கு இந்த மில்க் பியூட்டி தான் தேவைப்படுவதால், இவர் சொல்வது அனைத்திற்கும் தலையை ஆட்டிக் கொண்டு வருகிறார்கள். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தயாரிப்பாளர்கள் தலையில் மிளகாய் அரைத்து வருகிறார்.

Also read: எங்கேயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறாத்தா.. தமன்னாவால் படாத பாடுபடும் நெல்சன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்