ஐட்டம் டான்ஸராக மாற பல கோடி சம்பளம் கேட்ட தமன்னா.. சமந்தாவை ஓவர் டேக் செஞ்சிருவாங்க போல

சமந்தா ஒரு நேரத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பின்பு திருமணம் முடிந்து ஒரு சில படங்களில் நடித்த பிறகு பழைய மார்க்கெட் இல்லாமல் இருந்தார். அடுத்ததாக நாக சைதன்யா உடன் விவாகரத்து ஆன நிலையில் மீண்டும் சினிமாவில் என்டரி கொடுக்க வேண்டும் என்று நினைத்த இவர் அனைத்து ரசிகர்களையும் கவர வேண்டும் என்பதற்காக ஐட்டம் டான்ஸ்க்கு மாறிவிட்டார்.

இவர் ஆடிய ஊ சொல்றியா மாமா பாடல் பட்டி தொட்டி எல்லா பக்கமும் பரவி சமந்தாவை அடுத்து நிலைக்கு கொண்டு போய்விட்டது. இதனை அடுத்து தற்போது இருக்கும் ஒவ்வொரு நடிகைகளும் இதையே ஆயுதமாக பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். அந்த வரிசையில் பத்து தல படத்தில் சாயிஷா ஆடிய ராவடி பாடல் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது மட்டுமல்லாமல் படத்தில் நடித்து சம்பளம் வாங்குவதை விட அதிகமாக ஒரே பாட்டில் வாங்கி விட்டார்.

Also read: விட்ட இடத்தை பிடிக்க எல்லை மீறும் சமந்தா.. மிரள வைக்கும் லிப்லாக், உச்சகட்ட கவர்ச்சி

அந்த வரிசையில் தற்போது தமன்னாவும் இறங்கியுள்ளார். ஆனால் சமந்தாவை மிஞ்சும் அளவிற்கு இவர் ஆடப்போகும் ஐட்டம் டான்ஸ் க்கு அதிக கோடி சம்பளத்தை கேட்டிருக்கிறார். அதாவது தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பாலகிருஷ்ணா படத்தில் ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடுவதற்கு 5 கோடி சம்பளம் வேண்டும் என்று டிமாண்ட் செய்து இருக்கிறார்.

இவர் இப்படி கேட்டதும் அப்படத்தின் இயக்குனர் அதிக அளவில் கோபமடைந்து ஒரு பாடலுக்கு இவ்வளவு கோடியா என்று ஆத்திரமடைந்திருக்கிறார். இதன் பிறகு இப்படியே செய்தி பரவினால் நமக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வராது என்ற பயத்தினால் அந்த அளவுக்கு சம்பளம் கேட்கவே இல்லை. இந்த மாதிரி வதந்திகளை யாரும் பரப்பாதீர்கள்.

Also read: குத்தாட்டம் போடும் அளவுக்கு ஐட்டம் சாங் பாடிய 5 நடிகைகள்.. சமந்தா மார்க்கெட்டை ஏற்றிவிட்ட ஆண்ட்ரியா

அத்துடன் பாலகிருஷ்ணா சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அதனால் அவருடைய படத்தில் ஒரு பாடலில் ஆட போகிறேன் என்பது எனக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது. அதைக் கெடுக்கும் விதமாக நீங்களே ஏதாவது செய்திகளை பரப்பி விடாதீர்கள். இந்த மாதிரி செய்திகளை நான் படிக்கும்போது எனக்கு மிகவும் மன வேதனையை கொடுக்கிறது என்று ட்விட்டர் பக்கத்தில் சொல்லி இருக்கிறார்.

ஆனாலும் இவர் ஐந்து கோடி கேட்காமல் இந்த மாதிரி விஷயம் புகையாது. இவர் கேட்ட பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வராமல் போய்விடும் என்ற பயத்தினால் அப்படியே மாற்றி விடுகிறார். அடுத்ததாக பாலகிருஷ்ணா படத்தில் இவர் ஐட்டம் டான்ஸ் ஆடுவது உறுதியான நிலையில் சமந்தாவை மிஞ்சும் அளவிற்கு இவருடைய ஆட்டம் இருக்கப் போகிறது.

Also read: ஒரு கோடி சம்பளம் கொடுத்தது சும்மாவா.. தமன்னாவிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட இயக்குனர்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்