மாநாடு சக்சஸ் பார்ட்டியில் மண்ணை அள்ளிப் போட்ட டி.ராஜேந்திரன்.. விழி பிதுங்கி நிற்கும் சிம்பு

சிம்புவிற்கு வம்பு மட்டும் தீரவே தீராது போல. எப்போ பார்த்தாலும் அவருக்கு பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அனைவரும் சிம்பு ஒரு ஹிட் படத்தோடு கம்பேக் கொடுத்துள்ளார் என மாநாடு வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.

ஆனால் ஒருவரை தவிர. அவர் வேறு யாருமல்ல சிம்புவின் தந்தை டிஆர் தான். அதாவது மாநாடு படம் வெளியாவதற்கு முன்பு சாட்டிலைட் உரிமை விற்பனை ஆகாததால் பைனான்சியர் உத்தம் சந்திற்கு கொடுக்க வேண்டிய 5 கோடி ரூபாயை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியால் கொடுக்க முடியவில்லை.

இதனால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் பொறுப்பேற்று கொண்டதோடு, ஒருவேளை ரூ.5 கோடிக்கு மாநாடு சாட்டிலைட் விற்பனை ஆகவில்லை என்றால் மீதமுள்ள தொகையையும் அவரே கொடுப்பதாக உத்தரவாதம் அளித்த பின்னரே மாநாடு படம் திரைக்கு வந்தது.

ஆனால் தற்போது மாநாடு சாட்டிலைட் உரிமையை தனக்கு தெரியாமலேயே விற்பனை செய்துள்ளனர் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் பைனான்சியர் உத்தம் சந்த் மீது டி.ராஜேந்தர் வழக்குத் தொடர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநாடு படம் வெளியாகி இவ்வளவு நாள் ஆன நிலையில் இன்னும் பிரச்சனை ஓயவே இல்லை. இந்நிலையில், இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறுகையில், “வெற்றி கிரீடத்தை மக்களும் உழைப்பும் இணைந்து தலையில் சூடியுள்ள நேரத்தில் அதை கொண்டாடி மகிழ்வதை விட்டு விட்டு வழக்கா? நல்லதே வெல்லும் நன்றி இறைவா” என கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு சிம்புவிற்கு ஒரு வெற்றி படம் அமைந்துள்ளது. ஆனால் அதை கொண்டாடாமல் இப்படி வம்பு வளர்த்து வருவது எந்த விதத்தில் நியாயமாகும். ஒரு மனுஷன் சக்ஸஸ் பார்ட்டி கூட கொண்டாட முடியாத அளவிற்கு பிரச்சினைகள் வந்தால் என்ன செய்வது என்று விழிபிதுங்கி உள்ளார் சிம்பு.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை