சிம்புவின் திருமணத்தைப் பற்றி வாயை திறந்த டிஆர்.. என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு!

பல திறமைகளை உள்ளடக்கிய டி ராஜேந்தருக்கு அண்மையில் திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதனால் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த டிஆர்-க்கு ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இதனால் அவரது மூத்த மகன் சிம்பு தனது படப்பிடிப்பு எல்லாம் ஒத்தி வைத்துவிட்டு தந்தையை சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் சென்றார்.

சிம்பு தொடர் தோல்விக்கு பிறகு தற்போது தான் மாநாடு படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்து ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வரத் தொடங்கியுள்ளார். வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்கள் சிம்பு நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகயுள்ளது. ஆனாலும் தந்தையின் உடல் நிலை கருதி சிம்புவும் தனது பட வேலைகளை தள்ளி வைத்துள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை முடிந்த இன்று குடும்பத்துடன் டிஆர் சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் டிஆர் பேசியிருந்தார். அப்போது தான் நலம் பெறவேண்டும் என பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என கூறியிருந்தார். அப்போது சிம்புவின் திருமணம் குறித்து டி ஆர் பேசியிருந்தார்.

அதாவது டி ராஜேந்தருக்கு சிம்பு, குறளரசன், இலக்கியா மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் குறளரசன் மற்றும் இலக்கியா இருவருக்கும் திருமணம் முடிந்து குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டனர். ஆனால் தனது மூத்த மகன் சிம்புக்கு தற்போது வரை திருமணம் ஆகாமல் இருப்பதால் தான் டிஆருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது என்ற தகவல் வெளியானது.

தற்போது செய்தியாளர்களிடம் டிஆர் பேசும்போது சிம்புவின் நல்ல மனதிற்கு கண்டிப்பாக திருமணம் நடக்கும். மேலும் திருமணம் என்பது கடவுள் தீர்மானிப்பது, இரு மனம் ஒன்று சேர்ந்தால் தான் அது திருமணம். எங்கள் வீட்டிற்கு நல்ல குணமுடைய திருமகள் மருமகளாக வருவார் என எப்போதும் போல பஞ்ச் டயலாக் உடன் டிஆர் சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

இதை வைத்து பார்க்கும்போது சிம்புக்கு இன்னும் பெண் கிடைக்கவில்லை என்பது போல ரசிகர்கள் பேசி வருகிறார்கள். மேலும் இப்படியே போனால் கடைசிவரை சிம்பு சிங்கிள் ஆகத்தான் இருக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் வேதனையை தெரிவித்துள்ளனர்.