டி.ஆர் படத்துக்கு பாடிய ஒரே ஒரு பாடல்.. அந்த பாடலோட டிஎம்எஸ் சினிமா வாழ்கையே முடிந்தது.. அந்த பாட்டு வரிதான் மேட்டரு

தமிழ் சினிமாவின் அக்காலம் முதல் இக்காலம் வரை அடுக்குமொழி வசனத்திற்கு பெயர் பெற்றவர் டி.ராஜேந்திரன். இவரது வசனமான “வாடா என் மச்சி வாழைக்கா பஜ்ஜி” போன்ற வசனங்கள் இன்றுவரை தமிழ் சினிமாவில் பல படங்களில் பேசப்பட்டு வருகிறது.

அன்றைய காலத்தில் பல நடிகர்களுக்கு போட்டியாக இருந்தவர் டி. ராஜேந்தர். அதேபோல தான் பல இசையமைப்பாளர்களுக்கு போட்டியாளராக இருந்தவர் டி.எம் சௌந்தரராஜன்.

அன்றைய காலத்தில் இவர்கள் இருவருமே தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்து புகழின் உச்சத்தில் கொடிகட்டி பறந்தனர். ஒரு காலத்தில் டி.ஆர் ராஜேந்தர் பல படங்களில் இயக்குவதற்கான வாய்ப்பும் அதேபோல் டி.எம் சௌந்தரராஜன்க்கு பல படங்களில் இசையமைக்கும் வாய்ப்பும் குவிந்து வந்தன.

t rajender-tm soundararajan
t rajender-tm soundararajan

ஒரு முறை டிஆர் படமான ஒரு தலை ராகம் படத்தில் டி.எம்.எஸ்.சௌந்தர்ராஜனுக்கு பாடல் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்தப் பாடல் தான் “என் கதை முடியும் நேரம் இது” இந்த பாடலின் வரிகளுக்கு ஏற்பவே டி.எம்.எஸ் சினிமா வாழ்க்கையில் மார்க்கெட்டும் முடிந்தது.

அதுமட்டுமில்லாமல் இந்த பாடலை பாடியதற்கு டி.எம்.எஸ் மிகவும் வருந்தியதாகவும் அன்றைய காலத்தில் டி.எம்.சௌந்தரராஜன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அதன் பிறகு இவர்கள் இருவருமே சினிமாவில் அதிகமாக இணைந்து பணியாற்றவில்லை.

பின்பு டி.எம்.எஸ் தமிழில் கவனம் செலுத்தாமல் தெலுங்கு போன்ற அண்டை மாநிலங்களில் கவனம் செலுத்தி அதிகப்படியான படங்களில் பணியாற்றினார். பல வருடங்களுக்குப் பிறகு தற்போது இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -