பட்டும் திருந்தாத இயக்குனர்.. விலைபோகாத ஜெய்யை வைத்து எடுக்கும் ரிஸ்க்

இயக்குனர் வெங்கட் பிரபுவின் கேங்கில் முக்கிய நபராக இருப்பவர் நடிகர் ஜெய். இவர்களின் கூட்டணியில் கோவா, சென்னை 28 உட்பட பல திரைப்படங்கள் வெளி வந்துள்ளது. கடைசியாக ஜெய் நடிப்பில் நீயா 2 திரைப்படம் வெளியானது.

அதைத் தொடர்ந்து அவர் ஒரு சில திரைப் படங்களில் நடித்தாலும் அந்த திரைப்படங்கள் எதுவும் இன்னும் வெளியாகாமல் கிடப்பில் கிடக்கிறது. அதோடு அவரின் நடிப்பில் உருவான எண்ணித் துணிக, பிரேக்கிங் நியூஸ் போன்ற திரைப்படங்களும் இன்னும் வெளி வராமல் இருக்கிறது.

மேலும் வெங்கட் பிரபு கூட்டணியில் விஜய் நடித்த பார்ட்டி திரைப்படம் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் அந்த படமும் வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில் ஜெய் தற்போது இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிவ சிவா என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

ஏற்கனவே சுசீந்திரன், ஜெய் கூட்டணியில் இரண்டு படங்கள் கொரோனா ஊரடங்கு சமயத்தில் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டது. ஆனால் அந்த படங்களே இன்னும் பிசினஸ் ஆகாமல் மூட்டை கட்டி வைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது சுசீந்திரன் மீண்டும் ஜெய்யை வைத்து ரிஸ்க் எடுக்க தயாராகியுள்ளார்.

இவர்கள் இணையும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ்கிரண் நடிக்கிறார். ஏற்கனவே ஜெய் நடித்த இரண்டு படமும் விலை போகாத நிலையில் மீண்டும் ஜெய்யை வைத்து மூன்றாவதாக ஒரு படத்தை இயக்கும் சுசீந்திரனைப் பார்த்து சினிமா உலகம் ஆச்சரியத்தில் இருக்கிறது.

நடிகர் ஜெய் கடந்த சில வருடங்களாக நடிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்தார். காதல் தோல்வி, விபத்து என்று பல மன உளைச்சல்கள் சிக்கி குடிபோதைக்கு அவர் அடிமையானார். தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ள அவர் மீண்டும் சினிமாவில் ஆர்வத்துடன் நடித்து வருகிறார். சுசீந்திரன் உடன் அவர் இணையும் இந்த சிவ சிவா திரைப்படத்திற்கு ஜெய் தான் இசையமைப்பாளராக இருக்கிறார் என்பதும் கூடுதல் தகவல்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை