இந்தப் படத்தை அப்படி செய்ய முடியாது.. சூர்யாவுக்கு தூணாக நிற்கும் அரசியல்வாதி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல சமூக கருத்துள்ள திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சூர்யா. இவரின் நடிப்பில் கடைசியாக ஜெய்பீம் என்ற திரைப்படம் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றது.

இப்படம் எவ்வளவு பாராட்டை பெற்றதோ, அதே அளவிற்கு சர்ச்சைகளையும் சந்தித்தது. படத்தில் ஒரு குறிப்பிட்ட ஜாதியை இழிவு படுத்துவதாக கூறி அரசியல் கட்சிகள் பலரும் படக்குழுவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இது தவிர படத்தை தியேட்டரில் ரிலீஸ் பண்ண விடமாட்டோம் என்று சூர்யாவுக்கு பகிரங்கமாக மிரட்டலும் விடுத்தனர்.

மேலும் படத்தில் இடம் பெறும் சில காட்சிகளையும் மாற்ற வேண்டும் என்றும், நடிகர் சூர்யா 5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் சாதி சங்கம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இதனால் படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகள் நீக்கப்பட்டது.

இவ்வாறு ஜெய்பீம் படத்தில் அடுக்கடுக்காக பல பிரச்சினைகள் வந்தபோதும் பிரபலங்கள் பலரும் சூர்யாவுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டனர். அதன்பிறகு இந்த பிரச்சனை ஒருவழியாக முடிந்தது. தற்போது சூர்யாவின் நடிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் தயாராகியுள்ளது.

வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் பாண்டிராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இதனால் சூர்யாவின் முந்தைய படத்திற்கு பிரச்சனை செய்தது போல் இந்த படத்திற்கு செய்ய முடியாது. ஏனென்றால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு மிகப் பெரிய நெட்வொர்க் அதுமட்டுமல்லாமல் ஆளும் கட்சியைச் சேர்ந்த உதயநிதி ஸ்டாலினும் அதற்கு பக்கபலமாக இருப்பதால் இந்த படத்தை எதிர்க்க யாரும் முன்வர மாட்டார்கள்.

கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு சூர்யாவின் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்