படத்தில் நடிக்க பாரில் வேலை செய்த நடிகர்.. சூர்யாவால் வாய்ப்பு கிடைத்து தற்போது காணாமல் போன வில்லன்.!

Actor Suryaa: நடிகர் சூர்யா மூலம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து பின்னர் தன்னுடைய வித்தியாசமான நடிப்பினால் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய உச்சத்தை அடைந்த அந்த நடிகர், சினிமாவுக்காக பட்ட கஷ்டங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. வில்லனாகவும் ஹீரோவாகவும் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்த இவர், சினிமாவுக்காக ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார்.

நடிகர் சூர்யா கடந்த 2003 ஆம் ஆண்டு நடித்த மிகப்பெரிய ஹிட் அடித்த காக்க காக்க திரைப்படத்தில், பாண்டியா என்னும் கேரக்டர் மூலம் அறிமுகமான ஜீவன் தான் அந்த நடிகர். இந்த படத்தில் அவர் மிரட்டி இருந்தார். ஜீவன் இந்த பட வாய்ப்பு கிடைக்கும் வரை சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஒரே ஆசையில் பாரில் வேலை செய்து கொண்டிருந்திருக்கிறார்.

Also Read:கார்த்தியின் கைவசம் இருக்கும் 5 மெகா பட்ஜெட் படங்கள்.. அண்ணனை மிஞ்சிய தம்பி

உண்மையிலேயே நடிகர் ஜீவன் மிகப்பெரிய கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்தவராம். இவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய கனவாக இருந்திருக்கிறது. ஆனால் அவருடைய வீட்டில் யாரும் அதற்கு சம்மதிக்காததால், வீட்டை விட்டு வெளியே வந்து சினிமாவுக்காக வாய்ப்பு தேடி இருக்கிறார். இதனால் வீட்டில் செலவுக்கு பணம் கூட வாங்காமல் இருந்திருக்கிறார்.

தன்னுடைய சொந்த செலவுகளுக்காக இவர் சென்னையில் ஒரு பாரில் வேலை பார்த்திருக்கிறார். சூர்யா மூலம் தான் ஜீவனுக்கு காக்க காக்க படத்தின் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்கு முன் அவர் யுனிவர்சிட்டி எனும் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். சூர்யா, ஜீவனுக்கு வாய்ப்பு வாங்கி தரக் காரணம் அவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்களாம்.

Also Read:ரீ-ரிலீஸ் செய்து வசூலை வாரி குவித்த சூர்யாவின் வாரணம் ஆயிரம்.. களத்தில் தீயாய் நிற்கும் சுப்ரமணியபுரம்

நடிகர் ஜீவனுக்கு திருட்டுப் பயலே படம் மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது. வில்லத்தனத்தை ரொம்பவும் வித்தியாசமாக காட்டி ஜெயித்திருந்தார். அதன் பின்னர் அடுத்தடுத்து இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன. திருட்டுப் பயலே இரண்டாம் பாகத்திற்கு பிறகு ஜீவனின் மார்க்கெட் மொத்தமாக குறைந்து விட்டது.

ஒரு மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு ஜீவன் அடுத்தடுத்து தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களில் மொத்தமாக சொதப்பிவிட்டார். மேலும் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன் என முடிவெடுத்து அவருக்கு, அப்படி படங்களும் அமையவில்லை. இதனால் சினிமாவில் இருந்து ஒதுங்கிய ஜீவன் தற்போது சொந்த தொழிலை கவனித்துக் கொண்டிருக்கிறார்.

Also Read:கங்குவா-விற்கு முன் சூப்பர் ஹிட் படத்தை வைத்து வசூலை அள்ளும் சூர்யா.. 500 தியேட்டர்களில் ரீ ரிலீஸ்

- Advertisement -spot_img

Trending News