புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ரோலக்ஸ்-க்கு வாழ்த்து கூறிய விக்ரம்.. இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த சூர்யா

சமீபகாலமாக நடிகர் சூர்யா சமூக கருத்து கொண்ட பல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல் பெண்கள், குழந்தைகள் சம்பந்தபட்ட பல விழிப்புணர்வு தரும் கதைகளையும் இவர் தயாரித்து வருகிறார்.

மேலும் இவர் படிக்க வசதி இல்லாத குழந்தைகளுக்காக அகரம் என்ற ஒரு அறக்கட்டளையை ஆரம்பித்து அதன் மூலம் பல குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். அதனால் பல வேலை எளிய மாணவர்களும் இன்று படிப்பில் சிறந்து விளங்குகின்றனர். இதற்கு சூர்யா தான் முழு காரணமாக இருக்கிறார்.

இப்படி சூர்யா சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஒரு ஹீரோவாக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். அந்த வகையில் இவருடைய நல்ல மனசை பலரும் பாராட்டி வருகின்றனர். அதையெல்லாம் தாண்டி தற்போது அவருக்கு மிகப்பெரிய கௌரவம் ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது நடிகர் சூர்யா ஆஸ்கர் கமிட்டி மெம்பராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சினிமாவில் ஆஸ்கர் விருதுதான் மிகப்பெரிய உயரிய விருதாக பார்க்கப்பட்டு வருகிறது. அந்த விருதை வாங்க வேண்டும் என்று பல முன்னணி நட்சத்திரங்களுக்கும் ஆசை இருக்கிறது.

அப்படி பலரும் பெருமையாக நினைக்கும் ஆஸ்கார் கமிட்டியில் நடிகர் சூர்யா ஒரு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. வருடம் தோறும் இந்த கமிட்டியில் உறுப்பினர்களாக பல நபர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால் தென்னிந்திய சினிமாவில் இருந்து ஒரு நடிகர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறையாகும். இதன் மூலம் சூர்யா நம் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்து விட்டதாக பலரும் அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் கூறி வருகின்றனர்.

சூர்யா தற்போது இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அடுத்தடுத்து பல திரைப்படங்களிலும் அவர் கமிட்டாகி கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவருக்கு கிடைத்த இந்த ஒரு கவுரவம் அவருடைய குடும்பத்தினருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

மேலும் இதற்கு பெருமை சேர்க்கும் விதமாக கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

suriya-kamal-twit
suriya-kamal-twit
- Advertisement -

Trending News