ஒரே படத்தில் தயாரிப்பாளரை காலி செய்த சூர்யாவின் நெருங்கிய உறவினர்.. அதிர்ச்சியில் கோலிவுட்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ், தற்போது வசந்தபாலன் கூட்டணியில் வெளியான திரைப்படம் தான் ஜெயில். வசந்தபாலன் இயக்கும் இப்படத்தில் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார்.

ஜெயில் படத்தில் நந்தன் ராம், ரோபோ சங்கர், பசங்க பாண்டி, ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தை கிரிக்ஸ் சினி கிரியேஷன் ஸ்ரீதரன் தயாரித்துள்ளார். டிசம்பர் 9ஆம் தேதி ஜெயில் படம் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

ஜெயில் படத்தின் ரிலீஸ் தடை செய்யக்கோரி சூர்யாவின் உறவினர் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பாக ஞானவேல் ராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். மேலும், தங்களிடம் ஒப்பந்தம் செய்துவிட்டு மற்றொரு நிறுவனத்திடம் பட வெளியீட்டு உரிமை தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது என குறிப்பிட்டு இருந்தது. இந்த வழக்கினால் சூர்யாவின் உறவினர்க்கு 10 லட்சம் கிடைத்துள்ளது.

அதன்பிறகு கிரிக்ஸ் சினி கிரியேஷன் நிறுவனம் சார்பில் திரையரங்குகளில் ஜெயில் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த வழக்கின் காரணமாக ஜெயில் படத்தை திரையரங்குகளில் இருந்த ஒட்டுமொத்தமாக எடுத்துவிட்டனர்.

இதனால் ஜெயில் பட தயாரிப்பாளருக்கு 7 கோடியிலிருந்து 8 கோடி வரை நஷ்டம் ஆகி உள்ளது. சூர்யாவின் உறவினரான தயாரிப்பாளர் போட்ட ஒரு வழக்கில் ஜெயில் படத்தின் தயாரிப்பாளரை காலி செய்துவிட்டார். இதனால் ஜிவி பிரகாஷ் ரசிகர்கள் சூர்யா உறவினர் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

bachelor-gvprakash
bachelor-gvprakash
Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்