மீண்டும் பருத்திவீரனாக மாறிய கார்த்திக், சூர்யா.. தாறுமாறாக வெளிவந்த சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

கார்த்திக் முத்தையா இயக்கத்தில் விருமன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கிராமத்தை மையமாக கொண்டு கதைக்களம் உருவாகி உள்ளதால் படப்பிடிப்பினை மதுரை உட்பட்ட ஒரு சில இடங்களில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக சங்கர் மகள் அதிதி சங்கர் நடித்து வருகிறார். அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் எனும் படத்தில் நடித்து வருகிறார் ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளது மேலும் சூர்யா இப்படத்தில் ஆக்ரோஷமாக நடித்தது போல் பல காட்சிகள் இடம்பெற்றுள்ளன சமீபத்தில் இப்படத்தின் ஒரு சில காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

surya karthi
surya karthi

தற்போது சூர்யா மற்றும் கார்த்திக் இருவரும் சூட்டிங் ஸ்பாட்டில் வேட்டியுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. இப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இருவரும் ஒரு ஆக்ரோஷமான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள் என கூறிவருகின்றனர் மேலும் இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.