கொல மாஸாக வெளிவந்த கங்குவா பட போஸ்டர்.. அடேங்கப்பா! அசந்து போன சூர்யா

சூர்யா, பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் படத்தை ட்ராப் செய்த நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42 வது படமான கங்குவா படத்தில் நடித்து வருகிறார். மிகப் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் சற்று கூடுதலாகவே இருக்கிறது. ஏனென்றால் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

அதுமட்டுமின்றி கங்குவா படத்திற்காக பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 3டி அனிமேஷனில் உருவாகும் இப்படம் பத்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார்.

Also Read : சூர்யாவை விட 3 வயது குறைவு.. அம்மாவாக நடிக்க வைத்த இயக்குனர்

மேலும் இப்படம் ரிலீசுக்கு முன்பே பல கோடி டிஜிட்டல் உரிமையை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு நாளுக்கு நாள் கங்குவா படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில் ரசிகர்கள் கங்குவா படத்தின் போஸ்டர்களை AI டெக்னாலஜி மூலம் உருவாக்கி இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இந்த போஸ்டர்கள் அவ்வளவு தத்ரூபமாக உள்ளது. அதுமட்டும்இன்றி சூர்யா ரசிகர்கள் இந்த போஸ்டரை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். சூர்யாவே இந்த புகைப்படங்களை பார்த்து அடேங்கப்பா என்று அசந்து போய் விட்டாராம். அந்தளவுக்கு எல்லோரையும் கவரும் விதமாக இந்த போஸ்டர் வெளியாகி உள்ளது.

Also Read : விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் சூர்யா.. புது குண்டை போட்ட பிரபலம்

வித்தியாசமான லுக்கில் கழுகுடன் சூர்யா இருக்கும் புகைப்படங்கள் இணையம் முழுக்க நிறைந்து இருக்கிறது. கொல மாஸாக வந்திருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்த சிறுத்தை சிவா இதே போல் படத்தில் காட்சிகள் எடுத்து இருக்கலாமே என்ற எண்ணமும் அவருக்கு வந்திருக்க கூடும்.

சூர்யாவின் தீவிர ரசிகர்களால் மட்டுமே இப்படி ஒரு போஸ்டர்களை உருவாக்க முடியும். கங்குவா படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த மாதம் புதிய ப்ரோமோ வர அதிக வாய்ப்பு இருக்கிறது. அதை எதிர்நோக்கி சூர்யா ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

ரசிகர்களால் உருவாக்கப்பட்ட கங்குவா போஸ்டர்

kanguva-fan-made-poster
kanguva-fan-made-poster

போஸ்டரை பார்த்து அசந்து போன சூர்யா

kanguva-poster
kanguva-poster

Also Read : சாக்லேட் பாய்க்குள் ஒளிந்திருந்த வில்லன்.. ஒரு வருடத்திற்கு பிறகும் கொண்டாடப்படும் சூர்யா

- Advertisement -