எல்லா இயக்குனர்களையும் கைக்குள் போட்டுக் கொள்ளும் ரோலக்ஸ்.. உடன்பிறப்புக்கே செய்யும் பச்ச துரோகம்!

Actor Suriya: தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கனாக பார்க்கப்படும் சூர்யா தற்போது கைவசம் நிறைய படங்களை வைத்திருக்கிறார்.  சிறுத்தை சிவா இயக்கத்தில் பத்து மொழிகளில் 3டி முறையில் தயாராகிக் கொண்டிருக்கும் கங்குவா படத்தில் சூர்யாவின் கெட்டப் பார்க்கும்போது பயமுறுத்தும் அளவுக்கு இருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக இவர் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல், சுதா கொங்கரா இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார். இதற்கிடையில் அவருடைய உடன்பிறப்பான கார்த்தியின் படத்தை தள்ளி வைத்துவிட்டு தன்னுடைய படத்தை எடுக்கும்படி இயக்குனர் லோகேஷ் இடம் சொல்லி இருக்கிறார்.

Also Read: அடுத்தடுத்து 4 பட தோல்வியால் லோகேஷ் இடம் சரணடைந்த மாஸ் ஹீரோ.. விட்டுக் கொடுத்த ரோலக்ஸ் சூர்யா

தற்போதைய சூழலில் டாப் நடிகர்கள் அனைவரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடித்து, மாபெரும் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். அது இப்போது சூர்யாவிற்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. அதற்காக உடன்பிறப்புக்கே இப்படி ஒரு பச்ச துரோகத்தையா செய்வது! என பலரும் விமர்சிக்கின்றனர். 

ஏனென்றால் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை முடித்துவிட்டு ரஜினி படத்தை  எடுக்கப் போகிறார். அதன் பின் அடுத்ததாக கைதி 2 கண்டிப்பாக எடுப்பேன் என கூறினார். அதில் சிறு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதற்குள் சூர்யா அப்படி என்ன லோகேஷிடம் பேசினார் என்று தெரியவில்லை. அதனால் சூர்யாவை வைத்து ரோலக்ஸ் படத்தை எடுக்க முடிவு செய்துவிட்டார் லோகேஷ்.

Also Read: சூர்யாவுக்காக ரெண்டு தரமான சம்பவத்தை செய்ய போகும் லோகேஷ்.. ஹாலிவுட் அளவுக்கு எகிற போகும் மார்க்கெட்

உலக நாயகன் நடிப்பில் லோகேஷ் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படம் தான் விக்ரம். இந்த படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே ரோலக்ஸ் கேரக்டரில் சூர்யா நடித்து மிரட்டி இருப்பார். அந்த ரோலக்ஸ் கேரக்டரை வைத்து முழு படத்தையும் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார். இதனால் கார்த்திக் நடிக்கும்  கைதி 2 படத்தை தள்ளி வைத்துவிட்டு, வேக வேகமாக ரோலக்ஸ் படத்தை எடுக்க கூறி இருக்கிறாராம் சூர்யா.

தம்பியிடம் நான் பேசிக் கொள்கிறேன் என சொல்லி நோக்கி செல்லும் பேசி இருக்கிறார்கள் சூர்யா. இதனால் அண்ணனை எதிர்த்து பேசாத கார்த்தியும் எந்த பதிலும் சொல்லாமல் சரி என்று ஒப்புக் கொண்டுள்ளார். கிடைக்கிற எல்லா வாய்ப்புகளையும் தன் கைக்குள் வைத்துக்கொண்டு எல்லா படத்தையும் வேக வேகமாக முடித்து வெற்றி பெற வேண்டும் என்று தன்னுடைய ராஜதந்திரத்தை சூர்யா சரியாக செய்து வருகிறார். அதேசமயம் அவருடைய தம்பி கார்த்தியின் வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக நிற்கிறார்.

Also Read: தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என நிரூபித்த 5 சகோதரர்கள்.. டில்லிக்கு டஃப் கொடுத்து வரும் ரோலக்ஸ்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்