இஷ்டத்துக்கு கதையை மாற்றும் சூர்யா.. சகவாசமே வேணாம்னு ஓடிய சூப்பர் ஹிட் இயக்குனர்

Surya Changes made Director Frustrated: சூர்யாவிற்கு சமீபகாலமாகவே நேரம் சரியில்லை. வணங்கான் பாலா உடன் சண்டை, பாலிவுட் படங்களும் இழுபறியில் இருக்கிறது. மும்பையிலும் பல பிரச்சினைகளை சூழ்ந்து கொண்டு அவரை ஆட்டிப்படைக்கிறது.

கங்குவா படம் கிட்டத்தட்ட ஆறு மாதத்திற்கு மேல் இழுத்துக் கொண்டே போகிறது. படம் எப்பொழுது திரைக்கு வரும் என்று கூட தெரியவில்லை. இந்நிலையில் அடுத்த படம் சூர்யா, சூப்பர் ஹிட் இயக்குனர் ஒருவருடன் இணைந்து இருந்தார், இப்பொழுது அந்தப் படமும் இழுபறியில் இருக்கிறது.

சூரரை போற்று பட இயக்குனர் சுதா கொங்காரா. இவருடன் அடுத்த படத்திற்கு சூர்யா கமிட்டாகி இருந்தார். படம் மதுரையில் ஷூட்டிங் நடக்கப் போகிறது. இது ஒரு டைம் பீரியட் படம் என்றெல்லாம் கூறினார்கள். இதற்குப் புறநானூறு என்று பெயர் வைத்திருந்தனர்

சகவாசமே வேணாம்னு ஓடிய சூப்பர் ஹிட் இயக்குனர்

தற்போது புறநானூறு படமும் இழுவையில் இருக்கிறது. இந்த படம் கடந்த ஜனவரி மாதமே ஷூட்டிங் தொடங்குவதாக இருந்தது ஆனால் இன்று வரை அந்த படத்திற்கு ஒரு முடிவு தெரியவில்லை. இதற்கு காரணம் சூர்யா தான் என்கிறார்கள்.

சுதா கொங்காரா உடன் சூர்யாவிற்கு சில மணக்கசப்பு வந்ததாகவும், இந்த பட கதையில் சூர்யா பல மாறுதல்கள் சொல்லியதாகவும் ,இதனால் இருவருக்கும் இடையே பல பிரச்சினைகள் வந்து புறநானூறு படம் ட்ராப் ஆனது எனவும் கூறப்படுகிறது

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்