கதை திருட்டில் சிக்கிய சூர்யா படம்.. உஷாராகி சரி கட்டிய சம்பவம்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா. தற்போது நடிப்பது தாண்டி தயாரிப்புத் துறையிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் கூட 4 படங்களைத் தயாரித்து அமேசான் OTT தளத்திற்கு விற்றார். அப்படித்தான் இயக்குனர் அரிசியில் மூர்த்தி இயக்கத்தில் வெளியான ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தை தயாரித்தற்கு சூர்யாவிற்கும் பெரிய அளவில் பாராட்டுகள் கிடைத்தன. அதுமட்டுமில்லாமல் ஒரு கிராமத்தில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இப்படத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் சிறப்பாக இருப்பதாக பிரபலங்கள் பலரும் வெளிப்படையாகக் கூறினர்.

ஆனால் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் திரைப்படத்தின் கதை 2016 ஆம் ஆண்டு மராத்தியில் வெளியான ரங்கா படங்கா படத்தின் தழுவலில் உருவானதாகக் தகவல் வெளியானது. மேலும் கதை திருட்டு வழக்கில் சூர்யா மற்றும் படத்தின் இயக்குனர் இருவரும் தகுந்த ஆதாரத்துடன் பதில் அளிக்க வேண்டும் என கூறினார்கள்.

ramya-pandiyan-2
ramya-pandiyan-2

இதனால் சூர்யா படத்தின் இயக்குனரை அழைத்து விசாரித்துள்ளார். ஆனால் பின்பு சம்பந்தப்பட்ட மராத்தி படத்தின் படக்குழு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர்களுக்கான உரிய தொகையை சூர்யா வழங்குவதாக கூறியதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது சூர்யா இனிமேல் படத்தின் கதையை முழுமையாக அறிந்து இயக்குனர் எந்த படத்தின் தழுவல் என்பது விசாரித்த பிறகுதான் படத்தை தயாரிக்க முடிவு செய்திருப்பதாக கூறி வருகின்றனர்.

மேலும் சூர்யா படங்களை தயாரிப்பது தாண்டி அதனை எவ்வாறு சமாளிப்பது என்பது உட்பட அனைத்தையும் கற்றுக் கொண்ட பிறகே படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். ஏனென்றால் இடையில் கொடுக்கப்படும் குடைச்சல்களை சமாளிப்பது ஒன்றும் சாதாரண விஷயமில்லை என கூறி வருகின்றனர். மேலும் சூர்யா இனிமேல் யாருக்கும் பயப்படாமல் படங்களை தயாரிப்பார் எனவும் மக்களுக்கு பிடித்த படங்களை கண்டிப்பாக கொடுப்பார் எனவும் கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்