சூர்யா கெஞ்சி கேட்டும் மறுத்தேன்.. இப்ப நினைத்து வெட்கத்தில் தலைகுனியும் உதயநிதி

Actor Udhayanidhi and Surya: பொதுவாக சூர்யா படத்தில் மட்டும் அல்ல நிஜத்திலும் தனக்குத்தானே சில கோட்பாடுகளை வகுத்துக் கொண்டு அதன்படியே வாழ்பவர். மேலும் நடிகராக இருந்து பேரும் புகழும் வாங்கியதோடு மட்டுமல்லாமல் பொது வாழ்க்கையிலும் உதவிகளை செய்து வருகிறார். முக்கியமாக கல்விக்காக பல இளைஞர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறார்.

இப்படி நற்குணங்கள் கொண்ட இவர், அவருடைய படங்களில் யார் மனதையும் புண்படுத்தாமல் எந்த ஒரு தவறான புரிதல் மக்களிடம் சென்று விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்கக்கூடியவர். அப்படிப்பட்ட இவருடைய படத்தில் இட ஒதுக்கீடு சம்பந்தமான வசனங்கள் இடம்பெற்று இருந்தது.

Also read: விடுதலையால் இழுத்தடிக்கும் வெற்றிமாறன்.. சூர்யா எடுத்த அதிரடி முடிவு

ஆனால் அதில் சூர்யாவிற்கு உடன்பாடு இல்லாததால் அப்படத்தின் தயாரிப்பாளர் ஆக இருந்த உதயநிதியிடம் தனிப்பட்ட முறையில் அந்த குறிப்பிட்ட காட்சியை மட்டும் நீக்கி விடுங்கள் என்று கெஞ்சி கேட்டிருக்கிறார். அதாவது 2011 இல் வெளியான ஏழாம் அறிவு படத்தில் இட ஒதுக்கீடு சம்பந்தமான காட்சி இருந்தது.

அந்த சீன் படத்தில் வைக்க வேண்டாம், அதனை நீக்கி விடுங்கள் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அப்பொழுது உதயநிதிக்கு எந்தவித அரசியல் புரிதல் இல்லாததால் அந்த விஷயம் பெருசாகப்படவில்லை என்பதால் இருக்கட்டும் என்று விட்டுவிட்டார்.

Also read: வெங்கட் பிரபு படத்துடன் ஜாலி பண்ண போகும் தளபதி.. உதயநிதியை அப்படியே பின்பற்றும் விஜய்

தற்போது அரசியலில் அனுபவம் அடைந்த பிறகு அதனுடைய உள் அர்த்தங்களை உணர்கிறேன். அதனால் இப்பொழுது அந்த ஒரு விஷயத்தை நினைத்து மிகவும் வருத்தப்பட்டு இருக்கிறேன் என்று உதயநிதி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

இவர் அரசியலில் என்னதான் வாரிசு அடிப்படையில் உள்ளே நுழைந்து இருந்தாலும், இவருடைய அரசியல் பாணியை தனி விதமாகத்தான் இருக்கிறது. இவருடைய புரிதலுக்கு முக்கிய காரணமே அடித்தட்ட மக்களுடன் இணைந்து செயல்படுவது தான்.

Also read: எனக்கும் விஜய்க்கும் எந்த பிரச்சனையும் இல்லைன்னு லியோ ரிலீஸ்ல தெரியும்.. மறைமுகமா மிரட்டி உருட்டி பார்க்கும் உதயநிதி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்