சமீப காலமா தலைக்கேறிய சூர்யாவின் ஈகோ.. பாலிவுட் கணவால் பாதை மாறி ஆடும் ஆட்டம்

Surya Became Biggest Egoist: சூர்யா ஆரம்பத்தில் நன்றாக நடிக்கிறேனா, என்னை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா, என்னால் சினிமாவில் ஜெயிக்க முடியுமா என்ற நிலையில் இருந்து இன்று மாஸ் ஹீரோவாக ஆலமரம் போல் வளர்ந்து நிற்கிறார்.

சினிமாவில் ஒவ்வொரு விஷயத்திலும் தன்னை மெருகேற்றி ஒரு மாபெரும் கலைஞனாக உருமாறிவிட்டார். சமீப காலமாக வருடத்திற்கு ஒரு படங்கள் நடிக்கும் நிலைக்கு தன்னை மாற்றிக் கொண்டார் சூர்யா. 2021 ஜெய் பீம் படத்திற்கு அப்புறம் இவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த படமும் ஓடவில்லை.

2022 ஆம் ஆண்டு நடித்த எதற்கும் துணிந்தவன் படமும் காலை வாரியது.அதன் பின் 2022 ஆம் ஆண்டு கமலின் விக்ரம் படத்தின் ரோலக்ஸ் கதாபாத்திரம் இவரை பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சேர்த்தது. +

இந்த கதாபாத்திரத்தின் பெயரை வைத்து படங்கள் எடுப்பதாக லோகேஷ் கனகராஜ் திட்டம் போட்டார்.

பாலிவுட் கணவால் பாதை மாறி ஆடும் ஆட்டம்

சூர்யா மாதவன் நடித்த ராக்கெட்டேரி படத்திலும் ஒரு கெஸ்ட் ரோல் பண்ணினார். கடந்த ரெண்டு வருடங்களாக அவருக்கு படங்கள் இல்லை. சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் கங்குவா படத்தை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் சூர்யா.

இந்த படம் முதல் பாகம் நன்றாக ஓடியது என்றால் இரண்டாம் பாகம் எடுப்பதாகவும் திட்டமிட்டு வருகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக சமீபகாலமாக சூர்யா நடிக்கவிருக்கும் படங்கள் டிராப் ஆகி வருகிறது. இதற்கு காரணம் சூர்யா தானாம்.

சூர்யா தன்னை அஜித் விஜய் ரேஞ்சுக்கு நினைத்து கொள்கிறார் என்ற ஒரு பேச்சும் இரண்டு வருடமாக அடிபட்டது வருகிறது.

சூர்யாமிகவும் ஈகோ பிடித்தவராய் மாறி வருகிறார், அதன் காரணமாக கிட்டத்தட்ட மூன்று படங்கள் ட்ராப் ஆகியுள்ளது. வெற்றி மாறனின் வாடிவாசல், பாலாவின் வணங்கான், சுதாகங்காரனின் புறநானூறு என எடுத்துக்காட்டாக மூன்று படங்களையும் கூறுகிறார்கள்.

சூர்யா பாலிவுட் கணவால் தான் தமிழ் படங்களை தவிர்க்கிறார் என்ற பேச்சுக்களும் அடிபடுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்