புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

லியோவை ப்ரீ பிசினஸில் முந்திய சூர்யா 42.. உண்மை நிலவரத்தை போட்டு உடைத்த தயாரிப்பாளர்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 42வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 10 மொழிகளில் உருவாகுவதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக சூர்யா 42 படத்தை பற்றி இணையத்தில் பல செய்திகள் உலாவி வருகிறது.

அதாவது லியோ படத்தை விட ப்ரீ பிசினஸில் சூர்யா 42 படம் முந்தியதாக ஒரு செய்தி வந்தது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. திரிஷா, அர்ஜுன் போன்ற முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர். லியோ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Also Read : இயக்குனர்கள் கொடுத்த டார்ச்சரால் அஜித் கைவிட்ட 5 படங்கள்.. லட்டு மாதிரி சூர்யாவிற்கு அடித்த ஜாக்பாட்

இதுவரை இல்லாத அளவுக்கு ப்ரீ பிசினஸில் லியோ படம் பட்டையை கிளப்பி வருகிறது. ரிலீசுக்கு முன்பே 400 கோடியை தாண்டி இப்படம் வியாபாரம் ஆகியுள்ளதாம். இந்நிலையில் சூர்யாவின் ரசிகர்கள் அவரது 42 வது படம் லியோவை தாண்டி 500 கோடி வியாபாரம் ஆகியுள்ளதாக செய்தியை பரப்பி வருகிறார்கள்.

இது குறித்து சூர்யா 42 படத்தின் தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் தனஜெயன் ஒரு பேட்டியில் பேசி உள்ளார். அதாவது இந்த படம் லியோ படத்தை விட அதிக வியாபாரம் ஆகி உள்ளது என்பது உருட்டு தான். ஆனால் சூர்யாவின் திரை வாழ்க்கையில் அதிக வியாபாரமான படம் இதுதான்.

Also Read : விஜய், அஜித், சூர்யாவுக்கு போட்டியாக உருவாக்குவேன்.. சிம்புவுக்கு வாக்கு கொடுத்த தயாரிப்பாளர்

மேலும் விளம்பரங்களுக்காக சில போலியான தகவல்களை சிலர் பரப்பி வருகிறார்கள். ஆனால் அது எல்லாம் உண்மை இல்லை என்பதை சூர்யா 42 படத்தின் தயாரிப்பாளரே வெளிப்படையாக கூறியுள்ளார். நன்றாக இருந்தால் ஒரு படம் கண்டிப்பாக வெற்றி அடையும்.

அந்த வகையில் சூர்யா 42 படத்தின் மீது தனக்கு முழு நம்பிக்கை உள்ளதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார். சமூக வலைத்தளங்கள் இப்போது தலை தூக்கி உள்ளதால் இது போன்ற பொய்யான செய்திகள் அதிகமாக பகிரப்படுகிறது. இதை வைத்தே ஹீரோக்களின் ரசிகர்கள் அதிகம் சண்டையிட்டு கொள்கிறார்கள். இப்போது இதற்கு சரியான முற்றுப்புள்ளியை தயாரிப்பாளர் வைத்துள்ளார்.

Also Read : சூர்யாவின் 2 ஆஸ்தான இயக்குனர்களை தட்டி தூக்கிய அருண் விஜய்.. இது பழிக்கு பழியா இல்ல பாவமா.?

- Advertisement -

Trending News