Temple Urns: கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க கூடாதுன்னு முன்னோர்கள் சொல்வார்கள். இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அது அத்தனையுமே அறிவியல் சார்ந்த விஷயங்கள் தான்.
கோவில் கோபுரத்திலிருந்து கலசம், சிலைகள், கருவறை, கோவில் மணி என ஒவ்வொன்றிலும் அறிவியல் கொட்டி கிடைக்கிறது. அதில் கோவில் கலசத்தில் ஒளிந்திருக்கும் அறிவியலும் ரகசியமும் என்ன என்பதை இங்கு காண்போம்.
பொதுவாக கோவில்களுக்கு செல்லும் போது கோபுரத்தை நிமிர்ந்து பார்த்து கலசத்தை நோக்கி கையெடுத்து கும்பிடுவோம். அதற்கு பின்னால் இருக்கும் ஆன்மிக காரணம் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதனுள் அறிவியல் ரீதியான விஷயங்களும் இருக்கிறது.
கோவில் கோபுரத்தின் உச்சியில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் அமைக்கப்பட்டிருக்கும். அந்த கலசங்கள் ஒவ்வொன்றிலும் தானியங்கள் கொட்டி வைக்கப்பட்டிருக்கும். அந்த தானியங்கள் கலசத்தில் இருக்கும் உலோகத்துடன் இணைந்து மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கொடுக்கும்.
கோவில் கலசத்தில் இருக்கும் அறிவியல்
அதன்படி நெல், கேழ்வரகு, திணை, சோளம், மக்காச்சோளம், உப்பு, எள் போன்ற தானியங்களை முன்னோர்கள் கலசத்தில் சேமித்து வைத்தனர். அதிலும் குறிப்பாக வரகு தானியங்கள் தான் அதிகமாக சேமித்து வைக்கப்பட்டிருந்தது.
ஏனென்றால் வரகு மின்னலை தாங்கும் அதிக ஆற்றலை பெற்றுள்ளது. இப்படித்தான் அன்றைய காலத்தில் கோவில் கலசங்கள் இடி தாங்கியாக இருந்து மக்களை காப்பாற்றி இருக்கிறது.
மேலும் 12 வருடங்களுக்கு ஒருமுறை கோவில்களில் குடமுழுக்கு விழா நடைபெறும். இதிலும் ஒரு அறிவியல் இருக்கிறது. அந்த நாளில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புது தானியங்கள் சேமிக்கப்படும்.
எதற்காக என்றால் இந்த தானியங்களுக்கு மின்னலை தாங்கும் சக்தி 12 வருடங்கள் தான். அதனாலயே குடமுழுக்கு மூலம் புது தானியங்களை அதில் சேர்த்து வைக்கின்றனர்.
மேலும் மற்றொரு ஆச்சரியப்படுத்தும் காரணமும் இருக்கிறது. இப்போது போல அந்த காலத்தில் சில நாட்கள் மட்டும் மழை பெய்வது கிடையாது. மாத கணக்கில் தொடர்ந்து மழை பெய்யும். இதனால் ஊரே வெள்ளக்காடாக மாறியதும் உண்டு.
அப்பொழுது விவசாய நிலங்கள் மொத்தமும் சேதமடைந்து பயிர்கள் அழிந்து போகவும் வாய்ப்புண்டு. அந்த சமயத்தில் மீண்டும் பயிரிட விவசாயிகள் என்ன செய்வார்கள். இங்கு தான் தமிழனின் அறிவையும் அறிவியலையும் நாம் பாராட்ட வேண்டும்.
அந்த சமயத்தில் கலசங்களில் இருக்கும் தானியங்களை தான் மீண்டும் விதைப்பதற்கு எடுத்துக் கொள்வார்கள். இப்படி இந்த கோவில் கலசங்களில் அறிவியலும் முன்னோர்களின் அறிவும் இருக்கிறது.
ஆச்சரியப்படுத்தும் அறிவியல் செய்திகள்
- காசியிலும் நீங்காத பாவம் குடந்தையில் தீரும்
- அக்னி நட்சத்திரத்தின் அறிவியல், புராண காரணங்கள்
- எதே கோவிட் தடுப்பூசியால் ரத்தம் உறையுமா.?