ஃபர்ஸ்ட் லுக் வந்து டிராப்பான சூர்யாவின் 3 படங்கள்.. பாலாவுக்கு முன்பு டீலில் விட்ட 2 இயக்குனர்கள்

சூர்யா தற்போது வணங்கான் படத்தில் இருந்து விலகியது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது சூர்யாவின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் பிதாமகன் மற்றும் நந்தா. இந்த இரண்டு படத்தையுமே பாலா தான் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் மூன்றாவது முறையாக சூர்யா, பாலா கூட்டணி வணங்கான் படத்தில் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு நிலவியது. இதற்கான ஷூட்டிங்கும் கன்னியாகுமரியில் நடைபெற்றது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் சூர்யா மற்றும் இயக்குனர் பாலா இடையே கடுமையான சண்டை நிலவியுள்ளது.

Also Read : சூர்யாவை தொறத்திட்டு பாலா எடுக்கப்போகும் வணங்கான்.. அடுத்த ஹீரோ யார் தெரியுமா?

ஆகையால் இப்போது வணங்கான் படத்திலிருந்து சூர்யா வெளியேறி உள்ளார். ஆனால் இதற்கு முன்னதாகவே சூர்யா 2 படங்கள் பிரஸ்ட் லுக் போஸ்டர் வெளியான பின்பு விலகிவிட்டார். கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்தில் முதலில் சூர்யா மற்றும் தீபிகா படுகோன் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

ஆனால் இயக்குனருடன் சூர்யாவுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பின்பு இரண்டு வருடங்கள் கழித்து நடிகர் விக்ரமை வைத்து கௌதம் மேனன் துருவ நட்சத்திரம் படத்தை எடுத்து முடித்தார். இதைத்தொடர்ந்து சூர்யா இயக்குனர் ஹரியுடன் இணைந்து பல வெற்றி படங்களை தந்துள்ளார்.

Also Read : எவ்வளவுதான் நான் பொறுத்து போறது, உன் சங்காத்தமே வேண்டாம்.. பாலா வெளியிட்ட அறிக்கையால் அதிர்ச்சியில் சூர்யா

இந்நிலையில் ஹரி இயக்கத்தில் சூர்யா அருவா படத்தில் நடிப்பதாக போஸ்டர் வெளியானது. ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக படம் பாதியிலேயே டிராப் ஆனது. அதன் பின்பு சூர்யா தனது அடுத்த அடுத்த பட வேலைகளில் பிஸியாகிவிட்டார். ஆகையால் இந்த படமும் பாதியிலேயே கைவிடப்பட்டது.

இவ்வாறு அருவா, துருவ நட்சத்திரம் படங்களைத் தொடர்ந்து தற்போது சூர்யாவின் ட்ராப்பான படங்களில் வணங்கான் படமும் இணைந்துள்ளது. மேலும் சூர்யா அடுத்ததாக வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். மேலும் அண்மையில் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

Also Read : உருவத்திலும், நடிப்பிலும் ஒற்றுமையாக இருக்கும் நடிகர்கள்.. எஸ் ஜே சூர்யாவை ஜெராக்ஸ் எடுத்த வில்லன் நடிகர்