#Suriya44: விஜய் இடத்தை பிடிக்க முழு வீச்சில் இறங்கிய சூர்யா.. அதிரடியாய் வெளியான போஸ்டர்

vijay-suriya
vijay-suriya

Suriyaa44: தமிழ்நாட்டுல ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று கேள்வி பெருசா இருந்துச்சு. இப்போ அடுத்த தளபதி யார் என்று தான் அதிக அளவில் பேசப்படுகிறது. இன்னைக்கு வந்த நண்டு, சிண்டு பெயர் எல்லாம் இதில் அடிபடுது.

ஆனா உச்சத்தில் இருக்கும் சூர்யாவின் பெயர் வெளிவரவில்லை. இதற்கு முக்கிய காரணம் சமீப காலமாக அவருடைய படங்கள் எதுவும் பெரிய அளவில் பேசப்படாதது தான். இப்போதைக்கு சூர்யாவின் பெரிய நம்பிக்கையே கங்குவா படம் தான்.

இந்த படத்தின் போஸ்டர்களும் ஓரளவுக்கு சூர்யா ரசிகர்களை திருப்திப்படுத்தி இருக்கிறது. சூர்யா பாலிவுட்டில் கர்ணன் படத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் இடையில் வெளியாகி இருந்தது. இது என்ன கொடுமை சூர்யா இந்தி திரையுலகிற்கு போய்விடுவாரோ என்று அவருடைய ரசிகர்கள் பயந்தார்கள்.

இதற்கு இடையில் சூரரைப் போற்று கூட்டணி மீண்டும் இணைந்து புறநானூறு படத்தில் பணியாற்றி வருகிறார்கள். படத்தின் அப்டேட்டை கேட்டு சூர்யாவின் ரசிகர்கள் நச்சரித்து வந்தார்கள். இதற்கு முடிவு கட்டும் விதமாக பட குழு படப்பிடிப்பு வேலையில் தாமதம் அதிகமாக இருக்கிறது என சொல்லிவிட்டது.

இந்தி திணிப்பு போராட்ட த்தை இந்த படத்தின் திரைக்கதை உருவாகி வருவதால் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது. சூர்யா இப்போது நடித்துக் கொண்டிருக்கும் இரண்டு படங்களுமே வெளியாகாத நிலையில் அவருடைய 44 ஆவது படத்தின் அப்டேட் வெளியாகியிருக்கிறது.

அதிரடியாய் வெளியான போஸ்டர்

Suriyaa
Suriyaa

சூர்யா 44 என்ற ஹாஷ் டாக்குடன் வெளியாகி இருக்கும் இந்த அப்டேட்சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. சூர்யா தன்னுடைய 44 ஆவது படத்தின் மூலம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைய இருக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் நடிகர் விஜய் சேதுபதிக்கு சினிமாவில் பெரிய அடையாளத்தை பெற்றுக் கொடுத்தவர். அது மட்டும் இல்லாமல் அவருடைய இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் பெரிய வெற்றியை பெற்றது. சமீபத்தில் ரிலீஸ் ஆகி வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும் வணிக ரீதியாக வெற்றியை தக்க வைத்துக் கொண்டது.

இதற்கிடையில் நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது அவர் சூர்யாவுடன் இணைந்து இருப்பது உறுதியாகி இருக்கிறது.

இந்த படத்தை சூர்யாவின் 2d தயாரிப்பு நிறுவனம், கார்த்திக் சுப்புராஜ் உடைய ஸ்டோன் பெஞ்ச் உடன் இணைந்து தயாரிக்கிறது. இப்போதைக்கு இந்த படத்தை லவ், லாப்டர், வார் என்று அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். ஒருவேளை விஜய்க்கு சொன்ன கதையில் தான் இப்ப சூர்யா நடிக்கிறாரோ என்ற சந்தேகத்தையும் நெட்டிசன்கள் கிளப்பி இருக்கிறார்கள்.

 

 

Advertisement Amazon Prime Banner