நான் சொல்றத செய்யுங்க.. திடீரென சூர்யா 40 படக்குழுவினருக்கு கட்டளையிட்ட சூர்யா

தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தமிழ் சினிமாவில் வெற்றி நடை போடுபவர் சூர்யா. ஆனால் கடந்த சில வருடங்களாக அவரது வெற்றி நடையில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டுவிட்டது.

ஆனால் சமீபத்தில் வெளிவந்த சூரரைப் போற்று படம் மிகப்பெரிய வெற்றியை ஓடிடி வரலாற்றில் பெற்றாலும் தியேட்டர் ரீதியாக சூர்யா அதைவிட மிக பிரம்மாண்ட படம் ஒன்றை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

அதற்காக பார்த்து பார்த்து நடிக்கும் திரைப்படம்தான் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சூர்யா 40 திரைப்படம். கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த பாண்டிராஜ் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

மேலும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக முதல் முறையாக பிரியங்கா அருள்மோகன் என்ற இளம் நடிகை நடித்து வருகிறார். பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் புதுக்கோட்டையில் நடைபெற்று வந்தது.

அதனைத் தொடர்ந்து சூர்யாவுக்கு கொரானா தொற்று ஏற்பட்டு சில காலம் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. கொரானா சமயத்தில் சூர்யாவின் உடல்நிலை 40 சதவிகிதம் பாதிக்கப்பட்டதாம். இதன் காரணமாக தற்போது சென்னையை விட்டு வெளியே செல்ல தயங்கி வருகிறாராம் சூர்யா.

suriya40-cinemapetai
suriya40-cinemapetai

இதன் காரணமாக சூர்யா 40 படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் மீதமுள்ள மொத்த படப்பிடிப்பையும் சென்னையிலேயே நடத்தி முடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் படப்பிடிப்பு நடத்தினால் மட்டுமே படப்பிடிப்புக்கு வருவேன் எனவும் கூறி விட்டாராம். இதனைக் கேட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் படக்குழுவினரிடம் சொல்ல தற்போது சென்னையில் சூர்யா 40 படத்திற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாம்.

- Advertisement -