சூர்யா 40 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி, நேரத்தை அறிவித்த சன் பிக்சர்ஸ்.. அறிவிப்பே கொல மாஸா இருக்குபா!

சூரரைப் போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சூர்யா40 படத்தில் நடித்து வருகிறார். பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.

பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு காரணம் பாண்டிராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான கடைக்குட்டி சிங்கம் மற்றும் நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை சுவைத்ததுதான்.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குனர் பாண்டிராஜின் அடுத்தடுத்த படங்களை தயாரிக்க போவதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் என இப்போதே தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இது ஒருபுறமிருக்க சூர்யா 40 படத்தின் அறிவிப்புகள் பெரிதாக இல்லையென்றாலும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரே மாதத்தில் மொத்த படப்பிடிப்பும் முடிவடைய உள்ளதால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட தேதி குறித்துள்ளது சன் நிறுவனம்.

வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் வருவதை ஒட்டி சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜூலை 22-ஆம் தேதி மாலை 6 மணிக்கு சூர்யா40 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது.

இதற்கான அறிவிப்புகள் சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி சூர்யா ரசிகர்களை கொண்ட வைத்துள்ளது. அறிவிப்பு வீடியோவை மாஸாக இருப்பதாக கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்