கங்குவாவில் அஜித்தை ஓவர்டேக் செய்த சூர்யா.. 400 கோடிக்கு மேல் எகிரும் பட்ஜெட்

Surya in Kanguva: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்தில் சூர்யாவை பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாகவும், மிரட்டல் தோற்றத்துடனும் இருக்கிறார். அதனாலேயே கங்குவா படத்தின் அவதாரத்தை காண சூர்யாவின் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் சூர்யா அவர்களுடைய ரசிகர்களை ஏமாற்றும் விதமாக எந்த ஒரு விஷயமும் இருக்கக் கூடாது என்று ஒவ்வொன்றையும் ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார். அதாவது எல்லாமே ரியலாக இருக்க வேண்டும் என்று இவருடைய உடல் தோற்றத்தை டபுள் மடங்காக ஆக்கிக் கொண்டு, டூப் எதுவும் போடாமல் பல காட்சிகளில் சூர்யா ஒரிஜினல் ஆகவே நடிக்கிறாராம்.

அத்துடன் VFX டெக்னாலஜி ரொம்ப ஒரிஜினலா இருக்க வேண்டும் என்று சிறுத்தை சிவா எல்லா காட்சிகளிலும் மிரட்டும்படி எடுத்து வருகிறார். அந்த வகையில் பைக்கிலேயே சூர்யா பிளேட்டை தாண்டுகிறாராம், முதலையுடன் சண்டை போடுகிறாராம். இப்படி தொடர்ந்து நிறைய விஷயங்கள் VFX மூலமாக பண்ணுகிறார்கள்.

Also read: கேப்டன் வாரிசுக்கு நான் இருக்கேன்.. விஜய், சூர்யா செய்யாததை செய்யத் துணிந்த மாஸ்டர்

அஜித் தான் இந்த மாதிரி டூப் போடாமல் சில விஷயங்களை அவரே செய்ய வேண்டும் என்று நினைத்து பல ரிஸ்குகளை எடுப்பார். தற்போது அஜித்தை ஓவர் டேக் பண்ணும் அளவிற்கு சூர்யா கங்குவா படத்திற்காக பல சாகசங்களை செய்து ஓவர் ரிஸ்க் எடுத்து வருகிறாராம். சூர்யாவை பொருத்தவரை கங்குவா படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் ரிஸ்க் எல்லாம் பெரிய விஷயமே இல்லை என்பதற்கு ஏற்ப களத்தில் இறங்கி விட்டார்.

அதனாலையே இப்படத்திற்காக போட்ட பட்ஜெட்டையும் தாண்டி தற்போது பல மடங்கு எகிறி விட்டது. அந்த வகையில் கிட்டத்தட்ட 400 கோடிக்கும் மேல் இப்படத்தின் பட்ஜெட் உயர்ந்திருக்கிறது. இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் மே திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் 3d மற்றும் ஐமேக்ஸ் வடிவங்களில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் உட்பட 38 மொழிகளில் படம் வெளியிடப் போகிறார்கள். இதனைத் தொடர்ந்து படம் ரிலீசுக்கு முன்பே டிஜிட்டல் ஆடியோ மற்றும் சேட்டிலைட் உரிமைகளை பல கோடிக்கு விற்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் இப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையே அமேசான் பிரைம் வீடியோ வாங்கி இருக்கிறது.

Also read: ஊர் வாய்க்கு பயந்து வந்த சிவகுமார், கார்த்தி.. கேப்டன் சமாதியில் தேம்பித் தேம்பி அழுத சூர்யா

- Advertisement -spot_img

Trending News