அஜித்துடன் மோத போகும் சூர்யா பட வில்லன்.. பக்கா ஆக்சன் படமாக வரும் குட் பேட் அக்லி

Ajith : அஜித்தின் விடாமுயற்சி படம் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு தொடங்க இருக்கிறது. இதை அடுத்து அஜித்தின் அடுத்த பட அப்டேட்டும் சமீபத்தில் வெளியாகி அவரது ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருந்தது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தில் நடிக்க இருக்கிறார். பக்கா ஆக்சன் படமாக உருவாக உள்ள இந்த படத்திற்கு வில்லனை வலை வீசி தேடி வந்தனர் படக்குழுவினர்.

அதன்படி பாலிவுட் நடிகர் குட் பேட் அக்லி படத்தில் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் அந்த நடிகர் சூர்யா படத்தில் இப்போது வில்லனாக நடித்து வருகிறார்.

அஜித்துக்கு வில்லனாகும் பாபி தியோல்

அதாவது பாலிவுட்டில் பிரபல நடிகராக இருக்கும் பாபி தியோல் தான் குட் பேட் அக்லியில் அஜித்துடன் நடிக்க இருக்கிறார். இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.

பாலிவுட்டிஒல் சோல்ஜர், ஹவுஸ் ஃபுல், கிளாஸ் ஒப் 83 போன்ற படங்களில் பாபி தியோல் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய அனிமல் படத்திலும் இவர் இடம் பெற்று இருந்தார்.

இப்போது அஜித்துடன் மோத சரியான ஆளை தான் ஆதித் தேர்ந்தெடுத்துள்ளார். மேலும் குட் பேட் அட்லி படம் ஜூன் மாதம் தொடங்க உள்ள நிலையில் மே மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

பெரும்பாலும் இப்படத்தில் தென்னிந்திய நடிகர்கள் இடம் பெற உள்ளனர். அதோடு கதாநாயகி காண தீர்வு இப்போது நடந்து வருகிறது. 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு செம ட்ரீட்டாக அஜித் ரசிகர்களுக்கு குட் பேட் அக்லி படம் வர இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்