வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பிறந்தநாளை குறிவைக்கும் சூர்யா.. இது என்னடா வாடி வாசலுக்கு வந்த சோதனை

சூர்யா தனது பிறந்தநாளில் தான் நடிப்பில் வெளியாக உள்ள வணங்கான், வாடிவாசல் மற்றும் சிறுத்தை சிவா புதிய படம் ஆகிய படங்கள் குறித்த அப்டேட்டை வெளியிட திட்டமிட்டிருந்தார். ஆனால் சூர்யாவின் பிறந்த நாளுக்கு முன்பு பாலாவின் பிறந்தநாள் வந்ததால் வணங்கான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுமாறு சூர்யா கூறியுள்ளார்.

மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரம்மாண்டமாக கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார். வெற்றிமாறனுடன் சூர்யா இணைந்தால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் வாடிவாசல் படப்பிடிப்பில் இருந்து வெளியான ஒரு சில புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. அதுவும் சூர்யா வாடிவாசல் படத்திற்காக உண்மையான 2 காளைகளுடன் சண்டை போடும் வீடியோவை தன்னுடைய பிறந்த நாளன்று வெளியிட்டு ரசிகர்களை மிரள வைக்க திட்டமிட்டிருந்தார்.

ஆனால் வெற்றிமாறன் மற்றும் கலைப்புலி எஸ் தாணு இருவரும் இப்போது வாடிவாசல் படத்தினைப் பற்றிய எந்த ஒரு புகைப்படமும் வீடியோவும் வெளியிட வேண்டாம் என கூறியுள்ளனர். மேலும் வாடிவாசல் படத்தில் ஒரு சில காட்சிகள் மட்டும்தான் எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் பல காட்சிகள் எடுக்க வேண்டியுள்ளது என கூறியுள்ளனர்.

மேலும் வாடிவாசல் திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் ஒரு வருட காலமாகும் இப்போதே வாடிவாசல் படத்தினைப் பற்றிய வீடியோ வெளியிட்டால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைவதற்கு வாய்ப்புண்டு எனக்கூறி வெற்றிமாறன் மற்றும் கலைப்புலி எஸ் தாணு இருவரும் மறுத்துள்ளனர்.

மேலும் சூர்யாவும் எவ்வளவு சொல்லியும் இவர்கள் இருவரும் விடாப்பிடியாக வெளியிட வேண்டாமென மறுத்ததால் தற்போது சூர்யா இருவர் மீதும் சற்று கோபத்தில் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறிவருகின்றனர்.

இது என்ன பிரமாதம் சூர்யாவின் பிறந்த நாளுக்கு சில தியேட்டர்களில் வாடிவாசல் மற்றும் ஜெய்பீம் படங்கள் வெளிவர உள்ளன. அதற்கான டிக்கெட் புக்கிங் தற்போது தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News