சூர்யா நல்ல பையன் தான் ஆனா இதுல ரொம்ப மோசம்.. வெளிப்படையாக கூறிய பிரபலம்

சாக்லேட் அறிமுகமாகிய தற்போது ஆக்சன் திரைப்படங்களில் அசத்தி வருபவர் நடிகர் சூர்யா. அவரின் நடிப்பும் வசன உச்சரிப்பும் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது.

சினிமா துறையில் ஒரே குடும்பத்திலிருந்து அப்பா, அண்ணன், தம்பி என்று அனைவரும் நடிப்பில் பெரும் சாதனை படைத்திருக்கிறார்கள் என்றால் அது சாதாரண செயலன்று. சிவக்குமாரை போலவே அவரின் இரண்டு மகன்களும் சினிமா துறையில் நன்மதிப்பை பெற்றுள்ளனர்.

இதைப்பற்றி தயாரிப்பாளர் ராஜன் அவர்கள் ஒரு பேட்டியில் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார் சிவகுமாரின் ஒழுக்கம், காலந்வறாமை, நடிப்பில் நேர்த்தி என அனைத்து நற்குணங்களும் சூர்யா, கார்த்தி என இருவருக்கும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் திரைப்படங்கள் OTTயில் வெளியிடுவதைப் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு ராஜன் அவர்கள் கூறியதாவது, கொரோனா காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் நடிகர் சூர்யா முதன்முதலாக OTT முறையை முன்னெடுத்தார். அந்த காலகட்டத்தில் அது சரியானதுதான்.

k-rajan-cinemapettai
k-rajan-cinemapettai

அதை தொடர்ந்து பல படங்கள் வெளிவந்தன. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் திரையரங்குகளில் வெளியிடுவது பற்றி சூர்யா யோசனை செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் உடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது.

திரையரங்குகள் திறந்து இருக்கும் நிலையில் படங்கள் முதலில் தியேட்டரில் வெளியிட்ட பின்னரே OTTயில் வெளியிட வேண்டும் என்பது ஆகும். ஒரு மாதம் கழித்து அல்லது 15 நாட்களுக்கு பிறகு OTTயில் வெளியிடலாம் என்றும் தெரிவித்திருக்கிறது. இதை சூர்யா ஆலோசனை செய்து பார்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்