அச்சு அசல் நேர்கொண்ட பார்வை லுக்கில் வெளிவந்துள்ள சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக்.. 39வது படத்தின் வைரல் போஸ்டர்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. கடைசியாக வெளியான சூரரைப்போற்று திரைப்படமும் பெரிய அளவில் வரவேற்பு பெற்று வெற்றிபெற்றது.

இதனால் தற்போது இவரது ரசிகர்கள் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கான அப்டேட்காக காத்து வருகின்றனர். படத்தின் ஒரு சில புகைப்படங்கள் வெளியானாலும் ரசிகர்கள் இப்படத்தை பற்றிய சுவாரசியமான தகவலுக்காக காத்திருக்கின்றனர்.

இப்படத்தினை பிரபல நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் சூர்யா தயாரிப்பில் உருவாகி வரும் சூர்யா 23ஆம் தேதி பிறந்தநாள் அன்று சூர்யா 39 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளனர்.

jai bhim
jai bhim

அந்த பர்ஸ்ட் லுக்கை பார்க்கும் போது குடிசைவாழ் மக்களின் துயரங்களைப் போக்கும் ஒரு வக்கீல் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளது போல் வடிவமைத்துள்ளனர். தற்போது 2டி என்டர்டெயின்மென்ட் வெளியிட்ட ஜெய் பீம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதே வக்கீல் கதாபாத்திரத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிகர் அஜித்குமார் பெண்களுக்காக போராடி நடித்திருப்பார். தற்போது சூர்யாவும் மக்களுக்காக போராடும் ஒரு வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

- Advertisement -