வீடு தேடி சூர்யாவிற்கு வந்த பார்சல்.. திறந்து பார்த்து மகிழ்ச்சியடைந்த ஜோதிகா

கொரனா ஊரடங்கிற்கு பிறகு திரையரங்குகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்த தருணத்தில் வருடத்திற்கு 100க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்டு வந்த தமிழ் திரையுலகுக்கு கை கொடுத்தது என்னவோ ஓடிடி வெளியீடுகள் தான்.

சரியான நேரத்தில் வீடு தேடி வரும் திரையரங்குகளாக உருவெடுத்தன நெட்ஃபிளிக்ஸ் அமேசன் ப்ரைம் சோனி நிறுவனங்கள் அவை வெளியிட்ட படங்களும் ஏராளம் அதற்கனா ரசிகர்களும் தாராளம்.

அப்படி வெளியான படங்களில் சில பெரிய படங்களும் வெளியாகின நல்ல விலைக்கு விற்கப்பட்ட இப்படங்கள் ஓடிடி யில் நல்ல வருமானமும் ஈட்டியது. அப்படி வெளியான நடிகர் சூர்யாவின் நடிப்பில் இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் இணையத்தில் வெளியானது.

பெரிய எதிர்பார்ப்பில் இருந்த சூரரைப்போற்று ரசிகர்களால் திரையில் போற்றுவதற்கு தயாரானது கடைசி நேரத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டதால் அதே எதிர்பார்ப்புகளோடு படம் அமேசான் ப்ரைமில் வெளியானது.

soorarai pottru
soorarai pottru

சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்த இப்படம் வசூல் ரீதியிலும் வெற்றி கண்டதோடு விமர்சன ரீதியிலும் வெற்றி கண்டது.

இப்படம் வெளியாகி ஓராண்டு முடிவடையவுள்ள தருணத்தில் படத்திற்கு மெர்ல்போர்ன் திரைப்பட விருதுகளில் இருந்து விருது கிடைத்துள்ளது.

கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை வைத்து படமாக்கப்பட்ட இப்படத்திற்கு சிறந்த படத்திற்கான விருதும் சிறந்த நடிகருக்கான விருதும் கொடுக்கப்பட்டுள்ளது.

படத்திற்காக அனுப்பப்பட்ட விருதினை பெட்டியிலிருந்து பிரித்து எடுக்கும் வீடியோ 2D தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றப்பட்டு இப்போது ரசிகர்கள் பலராலும் வைராக்கப்பட்டு வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்