அண்ணன் சூர்யாவுடன் எடுத்துக் கொண்ட முதல் செல்பி இதுதான்.. கார்த்தி பகிர்ந்த புகைப்படம்

தமிழ் சினிமாவில் ஆயிரம் வாரிசு நடிகர்கள் வந்தாலும் ஒரு சில நடிகர்கள் மட்டுமே ரசிகர்கள் மனதை கவர்ந்து தந்தையின் பெயரை காப்பாற்றி தங்களுக்கும் தனிப்பட்ட ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொள்கின்றனர்.

அப்படிப்பட்ட வாரிசு நடிகர்களின் மிக முக்கியமானவர்கள் கார்த்தி மற்றும் சூர்யா. தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் சிவகுமாரின் தவப்புதல்வர்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.

படங்கள் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூக அக்கறைகளிலும் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இளைஞர்களுக்கு கல்வி, விவசாயிகளுக்கு உதவி என இருவரும் சேர்ந்து செய்யும் நல்ல காரியங்கள் பல இருக்கிறது.

அண்ணன் தம்பி இருவரும் தங்களுடைய படங்களின் வெற்றிக்கு எப்போதுமே உறுதுணையாக இருப்பது தான் இவர்களது சக்சஸஸுக்கு காரணம் என்கிறது சினிமா வட்டாரம். இதே நடைமுறைதான் தெலுங்கு சினிமாவிலும் தொடர்கிறது.

சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் பல விசேஷங்களில் கலந்து கொண்டாலும் பெரும்பாலும் இருவரும் தனிப்பட்ட முறையில் செல்பி போன்ற புகைப்படங்களை எடுத்துக் கொண்டதில்லை. ஆனால் சூர்யாவின் 46 வது பிறந்தநாளை முன்னிட்டு கார்த்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூர்யாவுடன் 2019ஆம் ஆண்டு முதன் முதலில் எடுத்த செல்பி புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

suriya-karthi-first-selfie
suriya-karthi-first-selfie

இந்த புகைப்படம் தற்போது கிட்டத்தட்ட 4 லட்சம் லைக்குகளை குவித்துள்ளது. சூர்யா மற்றும் சன் பிக்சர்ஸ் இணையும் எதற்கும் துணிந்தவன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -