வளர்த்துவிட்ட 3 இயக்குனர்களின் மார்பில் குத்திய சூர்யா.. கொழுந்து விட்டு எரியும் பருத்திவீரன் பிரச்சனை

Suriya Movie Directors: தமிழ் சினிமாவிற்கு நடிகர் சிவகுமாரின் மகனாக அறிமுகமான சூர்யா படிப்படியாக முன்னேறி இப்போது ரசிகர்களால் நடிப்பு அரக்கனாகவே பார்க்கப்படுகிறார். இருப்பினும் இவரை வளர்த்துவிட்ட 3 இயக்குனர்களை நன்றி விசுவாசமே இல்லாமல் பகைத்துக் கொண்டார்.

வசந்த்: சூர்யா நடிப்பில் வெளியான நேருக்கு நேர், பூவெல்லாம் உன் வாசம் போன்ற படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் வசந்த். இந்த படங்களில் எல்லாம் சூர்யாவை வசந்த் ட்ரீட் பண்ண விதம் சரியில்லை என்று, அதன் பின்பு அவருடன் அடுத்து படம் பண்ண முடியாது என சொல்லிவிட்டார். இருப்பினும் சூர்யாவின் ஆரம்பகால கட்டத்திற்கு வசந்த் இயக்கிய நேருக்கு நேர், பூவெல்லாம் உன் வாசம் போன்ற படங்கள்தான் முக்கிய திருப்பு முனையாக இருந்தது.

பாலா: சூர்யாவை ஒரு பக்கா ஆக்சன் ஹீரோவாக காட்டியவர் தான் இயக்குனர் பாலா. இவருடைய இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான நந்தா படம் தான் சூர்யாவின் சினிமா கேரியரை திருப்பிப் போட்ட படம். இப்படி சூர்யாவை வளர்த்துவிட்ட பாலாவுடன் அடுத்து வணங்கான் படத்தில் இணைந்தார். ஆனால் இந்த படத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அந்த படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டார். இப்போது வணங்கான் படத்தில் சூர்யாவிற்கு பதில் அருண் விஜய்யை வைத்து பாலா இயக்கிக் கொண்டிருக்கிறார்.

Also read: நஷ்டப்பட்டாலும் இவங்க கிட்ட மட்டும் எப்படி பணம் இருக்கு? மாபியா போல் செயல்படும் சூர்யாவின் 6 நிறுவனங்கள்

வளர்த்துவிட்ட 3 இயக்குனர்களை பகைத்துக் கொண்ட சூர்யா

அமீர்: கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விஷயம் தான் பருத்திவீரன் படத்தின் பஞ்சாயத்து. சூர்யா குடும்பத்திற்கு நல்ல நண்பராக இருந்த அமீர், கார்த்தியை தமிழ் சினிமாவிற்கு பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா திடீரென்று அந்த படத்தில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக விலகிவிட்டார். பின்பு இரண்டாம் பாதியை அமீர் தனது நண்பர்களிடம் காசை பிச்சு புடுங்கி எப்படியோ படத்தை தயார் செய்து வெளியிட்டார்.

ஆனால் இப்போது கார்த்தியின் 25வது படத்தின் கொண்டாட்டத்தின் போது அமீருக்கு எந்த அழைப்பும் கொடுக்காமல் அசிங்கப்படுத்தினர். அது மட்டுமல்ல ஞானவேல் ராஜா அமீரை திருடன், தயாரிப்பாளர்களின் பணத்தை சுரண்ட கூடியவன் என தரக்குறைவாக பேசினார் அப்போது கூட சூர்யா, கார்த்தி இருவரும் அமீருக்கு சப்போர்ட்டாக பேசாமல் ஞானவேல் ராஜா சொல்வது சரிதான் என சைலன்டாக இருந்து வருகின்றனர். இந்த விஷயம் இப்போது சமூக வலைத்தளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Also read: முதல் வெற்றியை ருசிப்பதற்கு நொந்து நூடுல்ஸ் ஆன விக்ரம்.. விடாப்பிடியாக இருந்து மெருகேற்றிய பாலா

Sharing Is Caring:

அதிகம் படித்தவை