சரவணன் என்ற நான் சூர்யா ஆனதே உங்களால் தான்.. கே வி ஆனந்த்தை பார்த்து கண்ணீர் விட்டுக் கதறும் சூர்யா

தொடர்ந்து தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்கள் பலரும் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தி கொண்டிருப்பது பலருக்கும் சோகத்தை கொடுத்திருக்கிறது. சமீபத்தில்தான் காமெடி நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக இறந்தார்.

அந்த துக்கமே அனைவருக்கும் சோகத்தை கொடுத்த நிலையில் அடுத்ததாக தற்போது அயன், கோ போன்ற பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் கே வி ஆனந்த் மாரடைப்பு காரணமாக இறந்தது மேலும் கோலிவுட்டை சோகமாக்கியுள்ளது.

கே வி ஆனந்த் புகைப்பட கலைஞராக இருந்து பின்னர் ஒளிப்பதிவாளராக மாறி இயக்குனராக பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். அதிலும் சூர்யாவுக்கு மிக நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் முதல் படமான நேருக்கு நேர் படத்தின் போட்டோ ஷூட் நடந்தபோது சூர்யாவை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக ஒரு நல்ல புகைப்படம் எடுக்க மெனக்கெட்டதை பகிர்ந்துள்ளார்.

suriya-kv-anand-photo
suriya-kv-anand-photo

அதுமட்டுமில்லாமல் சூர்யாவின் கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த அயன் படத்தை இயக்கியவரும் இவர்தான். இருவருக்கும் ஆரம்ப காலத்திலிருந்து நல்ல நட்பு வட்டாரம் இருந்து வந்தது.

சமீபத்தில்கூட சூர்யா மற்றும் கே வி ஆனந்த் கூட்டணியில் காப்பான் என்ற படம் வெளியானது. இந்நிலையில் கேவி ஆனந்த் மாரடைப்பு காரணமாக இறந்ததை நினைத்து வருத்தத்தில் இருக்கும் சூர்யா அவருடைய பழைய நினைவுகளை ஒரு அறிக்கையாக வெளியிட்டு தன்னுடைய அஞ்சலியை செலுத்தி உள்ளார்.

suriya-gives-heart-touching-statement-to-kv-anand
suriya-gives-heart-touching-statement-to-kv-anand
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்