தனது அடுத்த படத்தையும் OTT-க்கு வாரிக் கொடுத்த சூர்யா.. நொந்து போன ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே சமீப காலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தற்போது சூர்யா தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது சூர்யா தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் போஸ்டர் பார்க்கும் பொழுது ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்கும் என தெரியவந்தது.

அதே பிறந்த நாளன்று தன் சொந்த நிறுவனமான 2டி என்ற நிறுவனத்தின் மூலம் ஜெய் பீம் எனும் படத்தை தயாரித்து நடித்து வருகிறார் சூர்யா. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய தா. செ. ஞானவேல் இயக்கி வருகிறார்.

jai-bheem-cinemapettai
jai-bheem-cinemapettai

இப்படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்து வருகிறார். அதாவது பழங்குடி மக்களுக்காக போராடும் ஒரு வழக்கறிஞரின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் முன்னாள் நீதியரசர் சத்குருவின் வாழ்க்கை வரலாறு மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான பொழுது படத்தின் மீதான ஓரளவு எதிர்பார்ப்பு உருவானது.

தற்போது இப்படத்தை சூர்யா சொந்தமாக தயாரித்துள்ளார் அமேசான் பிரைம் வீடியோ படத்தை வெளியிடும் உரிமையை கொடுத்துள்ளார். இதனை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தையும் தியேட்டரில் பார்க்க முடியாமல் அமேசானில் தான் பார்த்தோம் இந்த படமாவது தியேட்டரில் பார்க்கலாம் என்று இருந்தால் இதுவும் அமேசான்க்கு கொடுத்து விட்டாரே என கூறிவருகின்றனர்.

- Advertisement -