மாஸ்டரால் வந்த ஆசை.. சூர்யா எடுத்த அதிரடி முடிவு.. இதை முதல்லேயே பண்ணிருக்கலாமே!

இந்திய சினிமாவில் உள்ள பலருக்கும் மாஸ்டர் படம் நிறைய புதிய வழிகளை உருவாக்கிக் கொடுத்துள்ளது. ஒரு படத்தை இந்த கொரானா காலகட்டத்திலும் எப்படி ப்ரோமோஷன் செய்து ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து என்பதை கற்றுக் கொடுத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் விஜய்யின் 28 வருட சினிமா கேரியரில் மாஸ்டர் படம் தான் முதல் pan india படமாக வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியான மாஸ்டர் படம் ஹிந்தியில் எதிர்பார்த்த அளவுக்கு செல்லவில்லை.

இருந்தாலும் முதல் முயற்சியிலேயே ஓரளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டோம் என்ற நம்பிக்கையில் அடுத்தடுத்த விஜய் படங்களை தொடர்ந்து இந்தியா முழுவதும் வெளியிடலாம் என்ற யோசனையில் விஜய்யின் அடுத்தடுத்த பட தயாரிப்பாளர்கள் இருக்கிறார்களாம்.

மாஸ்டர் படம் ஒரு வகையில் சூர்யாவுக்கும் புது ஐடியாவை கொடுத்துள்ளதாம். இதுவரை சூர்யா படங்கள் ஹிந்தியில் ரீமேக் ஆகியிருக்கிறதே தவிர நேரடி ரிலீஸ் ஆனது இல்லை. ஆனால் தற்போது தன்னுடைய சூரரைப்போற்று படத்திற்கு மிகப்பெரிய பிளான் ஒன்றை போட்டுள்ளாராம்.

sooraraipottru-cinemapettai
sooraraipottru-cinemapettai

சூர்யாவின் நீண்ட நாள் வெற்றி தாகத்தை தீர்த்த படம்தான் சூரரை போற்று. தென் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு அமேசான் தளத்தில் வெளியானது. ஆனால் ஹிந்தியில் வெளியாகவில்லை.

தற்போது சூர்யா அமேசான் நிறுவனத்திடம் பேசி சூரரைப் போற்று படத்தை ஹிந்தியில் டப் செய்து வெளியிட கோரிக்கை வைத்தாராம். தற்போது அதன்படி அமேசான் நிறுவனத்தில் சூரரைப்போற்று படத்தை இனி ஏப்ரல் 4ஆம் தேதியிலிருந்து இந்தியிலும் பார்க்கலாம். இது சூர்யாவின் அடுத்த படங்களின் pan-india ரிலீசுக்கு உதவும் என அவரது வட்டாரங்களில் சூர்யாவை உசுப்பேத்தியதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறுகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்