வலிமை ரிலீஸ் பார்த்து ஒதுங்கிய சூர்யா.. எதற்கும் துணிந்தவன் வெளியீட்டை உறுதி செய்த சன் பிக்சர்ஸ்

சூர்யா நடிப்பில் சமீபத்தில் உருவான ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் இப்படத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மற்றும் குறை கூறுவதாக எடுத்ததால் மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானது. இருந்தாலும் சூர்யா தரப்பிலிருந்து இதற்கு எந்த ஒரு விளக்கமும் அளிக்காமல் உள்ளனர்.

தற்போது சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை பொங்கலன்று வெளியிடுவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இதற்கு படக்குழுவினரிடம் இருந்து எந்த ஒரு தகவலும் வெளிவராமல் இருந்தது.

ஆனால் வருகிற பிப்ரவரி 4 ஆம் தேதி அன்று படத்தை வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். பொங்கல் அன்று வெளியிட இருந்த படத்தை ஒரு மாதம் தள்ளி வெளியிடுவதற்கு காரணம் அஜித் நடிப்பில் உருவான வலிமை படம் பொங்கலுக்கு வெளியாவதாக உள்ளது.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக அஜித்தின் திரைப்படங்கள் எதுவும் வெளிவராததால் பொங்கலன்று எந்த திரைப்படங்கள் வெளியிட்டாலும் அஜித்தின் வலிமை படம் தான் அதிகமான வசூலை பெறும் என்பதால் பொங்கலன்று வெளியிடுவதாக இருந்தால் மற்ற நடிகர்களின் படங்கள் அனைத்தும் தற்போது தேதிகள் மாற்றப்பட்டு படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது எதற்கும் துணிந்தவன் திரைப்படம் இடம்பிடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் எப்போதும் விழா காலங்களில்தான் படத்தை வெளியிடும் அப்படித்தான் சூர்யா நடிப்பில் உருவான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பொங்கல் அன்று வெளியிடப்படும் என எதிர்பார்த்தனர்.

ஆனால் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை பொங்கல் அன்று வெளியிடவில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். இதனை அறிந்த நெட்டிசன்கள் அஜித்தின் படத்திற்கு வழிவிட்டு சூர்யா ஒதுங்கிக் கொண்டதாக சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். சூர்யாவின் எதற்கும் துணித்தவன்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்