அஜித்துடன் நேருக்கு நேராக மோதும் சூர்யா.. இனி நாம யாருன்னு காட்ட வேண்டிய நேரம் வந்துருச்சு

ஆண்டுதோறும் தீபாவளி அன்று நிச்சயம் ஏதாவது ஒரு பெரிய நடிகரின் படம் வெளியாகும். அந்த வகையில் இந்தாண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படம் வெளியாக உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ரஜினியை திரையில் பார்க்க உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அண்ணாத்த படத்துடன் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படமும் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது வலிமை படம் பின்வாங்கி விட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. வலிமைக்கு பதில் தீபாவளி அன்று ரஜினிக்கு போட்டியாக சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

அப்படி என்றால் வலிமை படம் எப்போது என்றுதானே கேட்கிறீர்கள். வலிமை படம் ஒரு மாதம் கழித்து கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்கள். காரணம் இப்படத்திற்காக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக காத்து கொண்டிருக்கிறார்கள்.

valimai-02
valimai-02

ஆனால் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வலிமை படம் மட்டும் வெளியாகவில்லை. அதற்கு போட்டியாக நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படமும் அன்று தான் வெளியாக உள்ளதாம். இதனால் அஜித் மற்றும் சூர்யா படங்கள் நேரடியாக மோத உள்ளன.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் குடும்ப பாசம் கொண்ட ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகி உள்ளது. இப்படம் நிச்சயம் குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் வலிமை படமும் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் வெளியாவதால் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்