சூர்யாவுக்கு ஆஸ்காரே கொடுக்கலாம்.. புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர்.

தமிழில் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் இறுதியாக வெளிவந்த சூரரைப்போற்று படம் அவரது சினிமா வாழ்க்கையில் சிறந்த படம் என்று கூறலாம். இப்படம் தியேட்டரில் வெளியாகி இருந்தால் கூட சூர்யா இந்த அளவிற்கு பிரபலமாகி இருக்க மாட்டார்.

ஓடிடியில் வெளியானதால் அனைத்து மொழி ரசிகர்களும் இப்படத்தை பார்த்து சூர்யாவை பாராட்டி வருகின்றனர். சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியடைய முக்கிய காரணம் சூர்யாவின் எதார்த்தமான நடிப்பு தான். இப்படம் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பங்கேற்றது. ‌‌

இதுவரை இல்லாத அளவில் இந்த படத்திற்கு தான் சூர்யாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ரசிகர்கள் மட்டுமின்றி பல முன்னணி நடிகர்களும் சூர்யாவை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் பிரபல கன்னட நடிகர் சுதீப் சூர்யாவை பாராட்டியுள்ளார்.

kiccha-sudeep-cinemapettai
kiccha-sudeep-cinemapettai

சூர்யா குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள சுதீப், “நான் இறுதியாக ஓடிடியில் பார்த்த படம் சூரரை போற்று. சூர்யா திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். உண்மையைச் சொல்லப் போனால் இந்த படத்திற்காக அவருக்கு ஆஸ்கர் விருது கொடுத்திருக்க வேண்டும்.

நான் சந்தித்த அரிய மனிதர்களில் இவரும் ஒருவர். போலித்தனம் இல்லாதவர். இது ஹீரோயிச படம் அல்ல. கேரியரில் உச்சத்தில் இல்லாத சமயத்தில் இதுபோன்ற கதையை தேர்ந்தெடுத்து நடிப்பது என்பது துணிச்சலான ஒன்று” என பாராட்டியுள்ளார்.

ராஜமௌலி இயக்கத்தில் சமந்தா மற்றும் நானி நடிப்பில் வெளியான நான் ஈ படத்தில் சுதீப் வில்லனாக நடித்து மிரட்டி இருப்பார். இப்படம் மூலமாகவே இவர் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சுதீப் ஈகோ இன்றி சூர்யாவை பாராட்டியுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -