முற்றிப் போன சண்டை, நன்றி மறக்காத சூர்யா.. வெற்றிமாறனை ஓரம்கட்ட இதான் காரணம்

வெற்றிமாறன் இயக்கவுள்ள வாடிவாசல் திரைப்படத்தை சூர்யா மீண்டும் தள்ளிப்போட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வெற்றிமாறன் தற்போது சூரி நடிப்பில் விடுதலை திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

கூடிய விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ள நிலையில், அடுத்ததாக சூர்யாவின் நடிப்பில் வாடிவாசல் திரைப்படத்தை இயக்கலாம் என திட்டமிடப்பட்டிருந்தது. அதற்காக சூர்யாவும் ஜல்லிக்கட்டு காளைகளுடன் பயிற்சிகளையும் மேற்கொண்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களும் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் தற்போது சூர்யா,பாலா கூட்டணியில் சூர்யா 41, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பில் நடிக்கப்போகும் புதிய திரைப்படம் மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வரலாற்று கதைக்களம் கொண்ட பல திரைப்படங்களில் சூர்யா நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

இதனிடையே சமீபத்தில் வெற்றிமாறனை சந்தித்து பேசிய சூர்யா, வாடிவாசல் திரைப்படத்தை இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என சூர்யா தெரிவித்துள்ளார். மேலும் வெற்றிமாறனும் விடுதலை, விடுதலை 2 உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிவிட்டு, அதன்பின் வாடிவாசல் திரைப்படத்தை இயக்கலாம் என ஒப்புக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே வாடிவாசல் திரைப்படம் இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே எடுக்கப்பட வேண்டி இருந்த நிலையில், ஊரடங்கால் தள்ளிப்போனது. இந்நிலையில் தற்போது மீண்டும் இரண்டு வருடங்கள், வாடிவாசல் திரைப்படம் தள்ளிப்போவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யாவும் வெற்றிமாறனும் முதன்முதலாக இணைந்து உருவாக்கப்போகும் வாடிவாசல் திரைப்படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இருந்தாலும் இந்த நிலை கூடிய விரைவில் மாறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

- Advertisement -