தோல்வி இயக்குனரை தூக்கிவிடும் சூர்யா.. கோலிவுட்டில் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ள கூட்டணி!

தமிழ் சினிமாவில் ரன், சண்டக்கோழி, பையா போன்ற பல வெற்றிப்படங்களை தந்தவர் இயக்குனர் லிங்குசாமி இதன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கமர்சியல் இயக்குனராக வலம் வந்தார். ஆனால் அவர் இயக்கிய அஞ்சான் படம் படுதோல்வி அடைந்ததாலும், அந்த படத்தை அவரே வெளியிட்டதும் மிகப்பெரிய நிதிப்பிரச்சனையில் அவரை சிக்க வைத்தது.

சூர்யா நடிப்பில் உருவான அஞ்சான் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அப்படம் படுதோல்வியை சந்தித்தது சூர்யாவுக்கும் சற்று சறுக்கலை தந்தது. அதே போல கமலை வைத்து லிங்குசாமி தயாரித்த உத்தம வில்லன் படமும் படுதோல்வி அடைந்ததால் மேலும் கடனில் சிக்கி படமே பண்ணமுடியாத சூழல் உருவானது.

இந்நிலையில் தான் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவர் இயக்கிய சண்டக்கோழி 2 படமும் தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து லிங்குசாமிக்கு தமிழ் சினிமாவில் இருந்த மதிப்பும் குறையத் தொடங்கியது.

lingusamy-cinemapettai
lingusamy-cinemapettai

தற்போது தெலுங்கில் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. தொடர்ச்சியாக தோல்விகளை மட்டுமே வழங்கி வந்த லிங்குசாமியின் புதிய படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது லிங்குசாமி சூர்யாவுக்கு ஒரு கதை சொல்லி அதில் நடிக்க அவரும் ஓகே சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -