வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

எதிர்பார்ப்பை மிரளவிடும் சூர்யா 42.. அட்டகாசமான அப்டேட் கொடுத்த டீம்

சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் மிகப்பெரும் பொருட்செலவில் சூர்யா 42 படம் உருவாகி கொண்டு இருக்கிறது. 3டி தொழில்நுட்பத்துடன் 10 மொழிகளில் தயாராகும் இப்படத்தின் அப்டேட்டை தான் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இப்படத்திற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட லியோ படத்திலிருந்து விதவிதமான அப்டேட்டுகள் வெளிவந்து சோசியல் மீடியாவையே கலக்கிக் கொண்டிருக்கிறது.

இதனாலேயே சூர்யா ரசிகர்கள் ஏதாவது ஒரு அப்டேட் கொடுங்கள் என்று பட குழுவினருக்கு வேண்டுகோள் வைத்து வந்தனர். அதன் பலனாக தயாரிப்பாளர் சூர்யா 42 படத்தின் டைட்டில் இந்த மாதம் வெளியாகும் என்று கூறியிருந்தார். அதேபோன்று ரிலீஸ் தேதியும் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.

Also read: வி சென்டிமென்ட்டில் இருந்து விலகிய சிறுத்தை சிவா.. சூர்யா 42 டைட்டில் இதுதான்!

இந்நிலையில் சூர்யா 42 படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்டது. அதன்படி தயாரிப்பு தரப்பு சரியாக 6 மணிக்கு லோடிங் என்று வெளியிட்ட ட்வீட்டை பார்த்து ரசிகர்கள் காதில் கேட்க முடியாத அளவுக்கு வார்த்தைகளால் திட்டி தீர்த்தனர். இதெல்லாம் ஒரு அப்டேட்டா என்று கழுவி ஊற்றிய நிலையில் பலரும் எதிர்பார்த்த அந்த அறிவிப்பை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் சூர்யா 42 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வரும் ஏப்ரல் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.05 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இப்படத்தில் இணைந்துள்ள பிரபலங்கள் குறித்த செய்தியையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

Also read: சூர்யா மும்பையில் வீடு வாங்க இதுதான் காரணம்.. ஜோதிகாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

இது நிச்சயம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதன்படி யோகி பாபுவும் இப்படத்தில் இருக்கிறார் என்ற செய்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர், மதன் கார்க்கி, ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி ஆகியோரும் இப்படத்தின் ஒரு அங்கமாக இருக்கின்றனர்.

surya42-movie
surya42-movie

அந்த வகையில் வீரன் வருகிறான் என்ற வாசகத்துடன் வெளியாகி இருக்கும் இந்த அறிவிப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. ஏற்கனவே இப்படத்திற்கு வீர், கருடா, அக்னீஸ்வரன் போன்ற தலைப்புகள் தான் வைக்கப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் ஏப்ரல் 16 எப்போது வரும் என ரசிகர்கள் இப்போதே தேதிகளை கிழிக்க தொடங்கியுள்ளனர்.

Also read: சூர்யாவுக்கு டஃப் கொடுக்க வரும் வரலாற்று நாயகன்.. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படம்

- Advertisement -

Trending News