சூர்யா இத்தனை 100 கோடி படங்கள் கொடுத்திருக்கிறாரா? அப்புறம் ஏன் இப்படி சொதப்புறாரு?

தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் நாயகர்களில் விஜய் அஜித்திற்கு பிறகு பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் சூர்யா(Suriya). விஜய் அஜித்தை ஒரு காலத்தில் ஓரங்கட்டி சூப்பர் ஸ்டாருக்கு அடுத்து இடத்தில் வலம் வந்து கொண்டிருந்தார்.

ஆனால் சில படங்களின் கதை தேர்வில் சொதப்பி தற்போது ஒரு வெற்றி கூட கொடுக்க முடியாமல் கடந்த சில வருடங்களாகவே தடுமாறி வருகிறார். ஆனால் சூர்யா இதுவரை பலநூறு கோடி வசூல் படங்களை கொடுத்துள்ளார்.

முதல் முதலில் சூர்யா நடிப்பில் 100 கோடி வசூலை பெற்ற திரைப்படம் ஏழாம் அறிவு. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் சிவாஜி படத்திற்கு பிறகு பெரிய அளவில் எதிர்பார்ப்பை கிளப்பிய திரைப்படம் என்றும் சொல்லலாம்.

அதற்கு அடுத்ததாக ஹரி இயக்கத்தில் வெளிவந்த சிங்கம் படத்தின் இரண்டாம் பாகம் சிங்கம் 2. முரட்டுத்தனமான போலீஸ் கதையாக இருந்தாலும் சிங்கம் படத்திற்கு அப்படியே நேர் எதிராக இந்த படத்தின் கதை அமைந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக சூர்யா நடிப்பில் உருவான சயின்ஸ் பிக்சன் திரைப்படம் 24. இந்த படம் 100 கோடி வசூல் செய்தாலும் படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் படம் தோல்வியை சந்தித்ததாக அப்போதே பல பத்திரிகைகளில் வெளிவந்தது.

கடைசியாக சூர்யா நடிப்பில் 100 கோடி வசூலை பெற்ற திரைப்படம் சிங்கம் 3. ஒரு காலத்தில் சூர்யா படங்கள் வெளியாகும்போது மற்ற நடிகர்களின் படங்களை வெளியிடாமல் நிறுத்தி வைத்திருந்த சரித்திரம் எல்லாம் இருக்கிறது.

சமீபத்தில் வெளியான காப்பான் படமும் 100 கோடி வசூல் செய்ததாக லைகா நிறுவனம் அறிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சூரரை போற்று திரைப்படமும் கோடிக்கணக்கில் விற்பனை செய்யப்பட்டு OTT தளத்தில் வெளியானது. சூர்யா மற்றும் வெற்றிமாறன் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தை அவரை ரசிகர்கள் எதிர்பார்ப்பது மட்டும் இல்லாமல் கோடிக்கணக்கில் வசூல் பெறும் என கூறி வருகின்றனர்.