கோலிவுட்டில் பிஸியான நடிகராக உருவெடுக்கும் சூரி.. வெற்றிமாறனை சோதித்து பார்ப்பது நியாயமா.?

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது பல இளம் நடிகர்களின் கனவாக இருந்து வருகிறது.

ஏனென்றால் இவரது ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு இருப்பதால் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி நடை போடுகிறது. மேலும் வெற்றிமாறன் சூரியை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இந்த படத்தில் முதலில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் பாரதிராஜா நடிக்கவிருந்தார் என்பதும், அதற்குப் பிறகு விஜய் சேதுபதி கமிட்டானார் என்பதும் நாம் அறிந்ததே. இந்த நிலையில் சூரியின் கால்ஷீட்டுக்காக வெற்றிமாறன் வெறித்தனமாக காத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஏனென்றால் சூரி வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிக்க போவதற்காக பல மாதங்கள் மற்ற படங்களில் கமிட் ஆகாமல் இருந்தாராம். மேலும் சூரி கொடுத்த தேதிகள் அனைத்திலும் பாரதிராஜாவுக்கு பதிலாக நடிக்கும் நடிகரை தேர்வு செய்வது, குளிர், மழை போன்ற பிரச்சனைகளின்  காரணமாக முடிந்து போய்விட்டதாம். 15 நாள் மட்டும்தான் சூரியை வைத்து படம் இயக்கினாராம் வெற்றிமாறன்.

மேலும் மீதி படத்தை எடுத்து முடிக்க சூரியின் 40 நாள் கால்ஷீட் தேவைப்படுகிறதாம். ஆனால் தற்போது சூரி அண்ணாத்த, டான், பாண்டியராஜ்- சூர்யா சேர்ந்திருக்கும் மற்றொரு படம் ஆகிய படங்களில் பிஸியாக இருப்பதால் வெற்றிமாறனுக்கு கால்ஷீட் தர முடியவில்லையாம். இதனால் வெற்றிமாறன் சூரிகாக காத்துக்கொண்டிருக்கிறார் என்று சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.

soori-vetrimaran-cinemapettai
soori-vetrimaran-cinemapettai

எனவே, வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் தவம் இருந்து கொண்டிருக்கும் நிலையில், வெற்றிமாறன் சூரிகாக  காத்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -