
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தன்னுடைய பழைய தோல்வி பட தயாரிப்பாளருக்கு கால்சீட் கொடுக்காமல் இன்றைக்கு நாளைக்கு என நாளை கடத்துவது அவருக்கு சோகத்தை கொடுத்துள்ளதாம்
விஜய்யை வைத்து படம் தயாரிக்க ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் இந்தியா முழுவதும் அவரது கால்ஷீட்டுக்காக வெயிட் செய்து கொண்டிருக்கின்றனர். அதற்கெல்லாம் காரணம் தற்போது அவர் தொடர் வெற்றி படங்களையும் மிகப்பெரிய வசூலையும் கொடுத்து வருவதால் தான்.
ஆனால் விஜய்யின் கேரியரில் அவர் தோல்வியில் இருந்த போதே அவருடைய 50வது படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரித்தவர்தான் சங்கிலி முருகன். மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான சுறா திரைப்படம் பெரிய அளவு வெற்றியை பெறவில்லை என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.
அதன்பிறகு சுறா பட தயாரிப்பாளருக்கு தளபதி விஜய் மீண்டும் ஒரு படம் பண்ணித் தருவதாக கூறி வருடங்கள் பத்தாகி விட்டது. இப்போது வரை அதே பதிலைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறாராம்.
இதனால் வருத்தப்பட்ட சங்கிலி முருகன் அடுத்ததாக சிறிய பட்ஜெட் படங்களை தயாரிக்கலாம் என்ற முடிவை எடுத்துள்ளாராம். சமீபத்தில் யோகி பாபு நடிப்பில் வெளியான மண்டேலா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் தற்போது விஜய் கால்ஷீட் தரும் போது தரட்டும் என மண்டேலா போன்ற சிறிய பட்ஜெட் படங்களை தயாரித்து ஓடிடி நிறுவனங்களுக்கு விற்கலாம் என்று முடிவெடுத்துள்ளாராம்.
