ரஜினி, அஜித் இணைந்து நடிக்கும் படம்.. விஜய்யை காலி செய்ய சூப்பர் ஸ்டார் போட்ட புது பிளான்

Rajini-Ajith-Vijay: ரஜினி, விஜய் நடுவில் மறைமுகமாக இருந்த ஒரு பனிப்போர் இப்போது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. அது ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாடல் மூலம் கண்கூடாக தெரிந்தது. இதிலிருந்து சூப்பர் ஸ்டார் இறங்கி அடிக்க ஆரம்பித்து விட்டார் என்ற பேச்சுக்களும் எழுந்துள்ளது.

அந்த வகையில் ரஜினி இப்போது மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டு விஜய்யை ஓரம் கட்ட முடிவு செய்திருக்கிறாராம். அதாவது விஜய் அரசியலுக்கு வருவது, சூப்பர் ஸ்டார் பட்டம் போன்ற பல விஷயங்களால் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். அதற்கேற்றார் போல் பல விஷயங்களின் மூலம் அவர் சத்தம் இல்லாமல் காய் நகரத்தியும் வருகிறார்.

Also read: ஒரே ஹிட், வானத்துக்கும் பூமிக்கும் குதித்த விஜய் பட நடிகை.. மொத்தமும் சொதப்பி மூலையில் முடங்கிய சோகம்

இதையெல்லாம் கண்டும் காணாமல் இருந்த ரஜினி இப்போது நேரடியாக போட்டி களத்தில் குதித்திருப்பது பல விமர்சனங்களை முன்வைக்கிறது. ஹுக்கும் பாடலை தொடர்ந்து அடுத்த அடி நங்கூரமாக இருக்க வேண்டும் என ரஜினி இப்போது புது பிளான் ஒன்றை போட்டு அதை செயல்படுத்த லோகேஷையும் துணைக்கு அழைத்துள்ளார்.

அதாவது சூப்பர் ஸ்டார் மற்றும் லோகேஷ் இணைய இருக்கும் படத்தில் அஜித்தை ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும் என ரஜினி யோசனை கூறியிருக்கிறாராம். இதெல்லாம் லோகேசுக்கு கைவந்த கலை. முடியாது என்று மறுக்கும் நடிகரை கூட தன் சாமர்த்தியத்தால் கேமியோ ரோலில் கூட நடிக்க வைத்து விடுவார்.

Also read: 2 பிள்ளை பெற்ற பிறகு ரஜினிக்கு வந்த காதல்.. அந்த நடிகையை தான் கட்டுவேன் என முரண்டு பிடித்த சூப்பர் ஸ்டார்

சமீபத்தில் கூட லோகேஷ் அஜித் சம்மதித்தால் அவருடன் இணைந்து கண்டிப்பாக படம் பண்ணுவேன் என்று குறிப்பிட்டு இருந்தார். இதை வைத்தே ரஜினி அடுத்த பிளானை போட்டு விஜய்க்கு செக் வைக்க முடிவெடுத்துள்ளாராம். ஏற்கனவே விஜய் அஜித்துக்கு இடையே தொழில் ரீதியாக மறைமுகப் போட்டி நடந்து வருகிறது.

இதில் சூப்பர் ஸ்டாரும் தன் பங்குக்கு இறங்கி இருப்பது திரையுலக வட்டாரத்தையே சலசலக்க வைத்துள்ளது. அந்த வகையில் விஜய்யை காலி செய்ய முடிவெடுத்துள்ள ரஜினி விரைவில் அனைத்தையும் முடிவு செய்து அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.

Also read: 1000 கோடி வசூலில் இணையுமா லியோ? தயாரிப்பாளர் தலையில் இடியை இறக்கியது போல் பதிலை சொன்ன லோகேஷ்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்