2-ம் பாகத்திற்காக காத்திருக்கும் சூப்பர் ஸ்டார்.. படத்தைப் பார்த்து பிரமித்துப்போன ரஜினி

ரஜினி தான் எப்போதுமே சூப்பர் ஸ்டார் தான் என்பதை பல சமயங்களில் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அப்படித்தான் அவர் தற்போது ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு பிரம்மித்து போய் அதன் இரண்டாம் பாகத்துக்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் பட குழுவினர் ரொம்பவும் உற்சாகமாகி இருக்கின்றனர்.

இப்படி ரஜினியிடம் பாராட்டு வாங்கியவர்கள் வேறு யாரும் கிடையாது விடுதலை பட குழுவினர்கள் தான். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்திருந்த இப்படம் சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது. படத்தை பார்த்த அனைவரும் பாசிட்டிவ் விமர்சனங்களையே கொடுத்து வருகின்றனர்.

Also read: கமலுடன் துணிந்து மோதும் விக்ரம்.. பலத்தை நிரூபிக்க எடுத்த கடைசி ஆயுதம்

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் தற்போது விடுதலை படத்தை பார்த்துவிட்டு பட குழுவினரை நேரில் அழைத்து மனமார பாராட்டி இருக்கிறார். மேலும் இப்படம் தமிழ் சினிமா இதுவரை கண்டிராத வித்தியாசமான கதைகளம் மற்றும் திரை காவியம் என்றும் சூரியின் நடிப்பு பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் வெற்றி மாறன் போன்ற ஒரு இயக்குனர் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த பெருமை என்றும் புகழ்ந்து கூறியிருக்கிறார். இளையராஜாவின் இசையை கேட்கும்போது இசையில் என்றும் அவர் ராஜா தான் என நிரூபித்து விட்டார் எனவும் பாராட்டி இருக்கிறார். சூப்பர் ஸ்டார் வாயால் இப்படி ஒரு புகழாரத்தை கேட்ட பட குழுவினர் ஆஸ்கர் விருது கிடைத்த மகிழ்ச்சியில் துள்ளிக் கொண்டிருக்கின்றனர்.

Also read: தென்னிந்திய சினிமாவை மிரட்டிய இந்தியன் 2.. இதுவரை எந்த படமும் செய்யாத சாதனை

பொதுவாகவே ரஜினி எந்த தரமான திரைப்படம் வெளிவந்தாலும் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பாராட்ட தயங்குவது கிடையாது. நேரில் பார்க்க முடியவில்லை என்றாலும் கூட போனில் அழைத்தாவது தன் வாழ்த்துக்களை கூறிவிடுவார். தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி திரைப்படங்களை கூட இவர் பாராட்டி அவர்களை உற்சாகப்படுத்துவார்.

இதுதான் ரசிகர்கள் மத்தியில் அவரை ஒரு தனித்தன்மையுடன் காட்டுகிறது. அந்த வகையில் விடுதலை படத்தை பார்த்துவிட்டு ரஜினி கொடுத்த இந்த விமர்சனம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் இதன் இரண்டாம் பாகத்திற்காக சூப்பர் ஸ்டார் மட்டுமல்லாமல் ரசிகர்களும் பெரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also read: கமலுக்கு நோ சொன்ன ரஜினிகாந்த்.. அதுவும் இந்த டாப் இயக்குனரை நழுவவிட்ட சோகம்!

- Advertisement -