வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

33 வருடத்திற்கு பின் கருணை காட்டிய சூப்பர் ஸ்டார்.. தலைவருக்கு நிகர் தலைவர் தான், தெறிக்கும் ட்விட்டர்

Actor Rajini: 72 வயதானாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போதும் இளசு போல் எனர்ஜி குறையாமல் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவருடைய ஜெயிலர் படம் வெளியாகி தன்னை சூப்பர் ஸ்டார் என்பதை அழுத்தமாக நிரூபித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு பிறகு அடுத்ததாக தலைவர் 170 படத்திலும் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கப்பட்டது. இந்த படத்தில் ரஜினியுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் இணைந்து நடிக்கிறார். இதை ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் பெருமையுடன் தெரிவித்தார்.

இந்த பதிவுடன் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படத்தையும் இணைத்திருந்தார். ரஜினியின் இந்த ட்விட்டர் பதிவை டேக் செய்து தற்போது அமிர்தா பச்சனும் பதில் ட்விட் போட்டு தெறிக்க விட்டிருக்கிறார். இது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

‘நீங்கள் என் மீது மிகவும் கருணை காட்டுகிறீர்கள், ஆனால் படத்தின் தலைப்பைப் பாருங்கள், தலைவர் 170. தலைவர் என்றால் நீங்கள்தான். தலைவருக்கு நிகர் தலைவர் தான், என்னால் உங்களுடன் என்னை ஒப்பிட முடியாது! மீண்டும் உங்களுடன் பணிபுரிவதில் பெருமிதம் கொள்கிறேன்’ என்று அமிதாப் பச்சன் அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

81 வயதாகும் அமிதாப் பச்சன் தன்னைவிட வயது கம்மியாக இருக்கும் ரஜினியுடன் பணி புரிவதை பெருமையாக பார்க்கிறார். இவர் சூப்பர் ஸ்டாருடன் இணைவது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. மேலும் 33 வருடம் கழித்து இந்த இரண்டு ஜாம்பவான்களும் தலைவர் 170 படத்தில் இணைந்து தரமான சம்பவத்தை செய்யப் போகின்றனர்.

அமிதாப் பச்சனின் தெறிக்கும் ட்விட்டர்

 Amitabh Bachchan-twit
Amitabh Bachchan-twit

டி. ஜே. ஞானவேல் இயக்கும் இந்த படம் ஒரு உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ரஜினிக்கு பிறகு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாக்கப்படுகிறது.

- Advertisement -

Trending News